நித்தியக்கடன் டிசம்பர் 23 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 23


🏞️🌳🏞️🌳🏞️🌳🏞️🌳🏞️🌳🏞️


🔶 இன்றைய நித்தியக்கடன்


🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔶 இன்றைய சாதகம்


🔶 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.

 

🔶 இன்றைய நற்சிந்தனை


🔶 பண்டைய காலங்களில் நாம் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தோம். பசுமையும் இயற்கை வளங்களும் நம்மை தொன்று தொட்டு பாதுகாத்து வந்திருக்கிறது. இன்றைய நவீன கருவிகள் நம் சிந்தனையில் விளைந்தவை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும், பூமியின் இயற்கை வளங்களையும் நிறையவே அழித்துவிட்டோம். இல்லை என்று மறுப்பதற்கு இயல்லை.


🔶 இன்றைய தற்சோதனை


🔶 இயற்கை வளங்களை பயன்படுத்தி தான் நாம் வாழ்ந்தாக வேண்டும், ஆனால் இயற்கையை அழித்து நாம்  வாழகூடாது. இந்த இயற்கை வளங்களை பாதுகாக்கக்கூடிய முக்கியமான காலகட்டத்தில், நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்து, "நல்வினை பதிவுகளும், இயற்கை வளங்களும்" இதை ஆழமாக சிந்தித்து தற்சோதனை செய்து தெளிவு பெறுவோம்.


🔶 இன்றைய பண்புப் பயிற்சி


🔶 எப்போது நாம் நம்மை கடந்து அக்றிணை பொருளுக்கும், உயர்திணை பொருளுக்கும் மதிப்புக் கொடுக்கிறோம். அப்போதுதான் நம்முடைய மதிப்பு நமக்குள்ளாக உயர்கிறது. உங்கள் உயிருக்குள் இருக்கும் இறையாண்மையை மனிதநேயத்தை உயிரோடு மீட்டெடுத்து அதனோடு வாழும் இந்தப் பண்பே இறை ஞானம் ஆகும். வாழ்க வளமுடன்...

 

🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🔶 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments