நித்தியக்கடன் டிசம்பர் 22 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 22


🏮⛳🏮⛳🏮⛳🏮⛳🏮⛳🏮


♾️ இன்றைய நித்தியக்கடன்


♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♾️ இன்றைய சாதகம்


♾️ வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.

 

♾️ இன்றைய நற்சிந்தனை


♾️ மனதிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள், மனதிற்கு ஓய்வு தேவைப்படுகிறது. உடலோடு மனம் இணைந்து இயங்குவதால் உடல் இயக்கம் உள்ளவரை மன இயக்கம் இருந்துகொண்டேதான் இருக்கும். இருப்பினும் மனம் தவத்தில் ஈடுபடும்போதும், உடல் தளர்த்தலில் ஈடுபடும்போதும், மனமானது ஓய்வை சந்திக்கிறது. இந்த ஓய்வு உயிருக்குள் மனம் அடக்கம் பெற்றதால் கிடைத்த நிறைவாகும்.


♾️ இன்றைய தற்சோதனை


♾️ தியானம் செய்யும்போது மனம் உயிராகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. உடல் தளர்த்தலின் போதும் மனம் உடல் இயக்கமின்றி அசைவற்ற நிலைக்கு மனம் தன்னை உயர்த்திக் கொள்கிறது. இவ்வாறாக மனம் தன்னை தானே புதுப்பித்துக் கொள்ள கூடிய இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது.


♾️ இன்றைய பண்புப்பயிற்சி


♾️ மனதிற்கு ஓய்வு கிடைத்து அது மீண்டும் இயக்கத்திற்கு வரும்போது, ஒரு முழுமையான நிறைவான நிலையில் இயங்குவதற்கு தயாராகிறது. இந்த நிலைபாட்டிற்கு மனம் மீண்டும் மீண்டும் பிரயாசப் படுகிறது. மனதிற்கு தயவு செய்து உதவி செய்யுங்கள். அதன்பின்னர் மனம் உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். எல்லா வகையான நிறைவுகளையும் உங்களுடைய அனுபவமாக மாற்றி அமைத்துக்கொள்ள இது பேருதவியாக அமையும். வாழ்க வளமுடன்...

 

♾️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♾️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


♾️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments