வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 21
♻️🔥♻️🔥♻️🔥♻️🔥♻️🔥♻️
🌀 இன்றைய நித்தியக்கடன்
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 இன்றைய சாதகம்
🌀 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🌀 இன்றைய நற்சிந்தனை
🌀 தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள். எதற்காகவும் எப்போதும் எங்கேயும் எந்த காரணத்தை முன்னிட்டும் என்னை களவு கொடுக்காதீர்கள். எனக்கு உங்களை விட்டால் வேறு யாரும் கிடையாது, எனக்கு ஆதரவு கொடுங்கள், என் மீது கருணை காட்டுங்கள்.
இப்படிக்கு
உங்கள் மனசாட்சி
🌀 இன்றைய தற்சோதனை
🌀 உங்களுடைய உண்மையான சொத்து என்பது உங்களின் மனசாட்சி தான். மனசாட்சியை இழந்துவிட்டு மற்றதை பெருக்கிக் கொண்டாலும், அது அனைத்தும் உங்களுக்கு எதிர்காலத்தில் எந்த வகையிலும், நன்மையை தரப்போவது இல்லை. ஏனெனில் மனசாட்சியே தெய்வம் ஆக இருக்கிறது.
🌀 இன்றைய பண்புப் பயிற்சி
🌀 உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்டும் ஞானக்கண்ணாடி நம் மனசாட்சி. மனசாட்சியை மதிக்கும் பண்பில் உயரும் போதுதான் ஒரு மனிதன் உயிருக்கும், பிறப்புக்கும், இறை உணர்வுக்கும் உகந்த செயலை செய்கின்றான் என்பதை மறந்துவிடக்கூடாது. மனசாட்சியை மதிப்போம் நம்முடைய மதிப்பு என்ன என்பதை உணர்வோம். வாழ்க வளமுடன்...
📊 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
📊 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
📊 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment