நித்தியக்கடன் டிசம்பர் 17 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 17


🌿💢🌿💢🌿💢🌿💢🌿💢🌿


🌾 இன்றைய நித்தியக்கடன்


🌾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌾 இன்றைய சாதகம்


🌾 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


🌾 இன்றைய நற்சிந்தனை


🌾 பலவகையான தானியங்கள் ஒன்றாக கலந்து இருக்கிறது. இவைகள் அனைத்தையும் நாம் மண்ணில் விதைத்தால் அந்தந்த செடி அந்தந்த தானியம் என்று சரியாகவே முளைக்கும். இதுபோல நமக்குள் பல வகையான பண்புகள் இருக்கின்றன. மனித பண்புகள், தெய்வீக பண்புகள், விளங்கின பண்புகள் என்று பல வகையான பண்புகள் நமக்குள் இருக்கிறது. இவைகள் அனைத்தையும் நாம் முறைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் பண்படுத்தப்பட்ட நல்ல நிலம் தேவை.


🌾 இன்றைய தற்சோதனை


🌾 நம்முடைய உடலானது நிலத்துக்கு சமானம். இந்த உடலை பண்படுத்தி பக்குவப் படுத்தினால் மட்டும்தான் இதில் நல்ல விதைகள் (பண்புகள்) முளைக்கும். இவைகள் அனைத்தும் செயல் விளைவு என்ற இறை நீதியின் அடிப்படையிலேயே அமைந்து இருப்பதை உணர முடியும். நம் வாழ்க்கையில் நடந்து முடிந்தவைகளுக்கும், இனி நடக்க வேண்டியவைகளுக்கும், நடந்து கொண்டிருப்பவைகளுக்கும் நிச்சயமாக காரணம் இருக்கிறது. இதற்கான விடை அவரவர் கருமையத்தில் உள்ளடங்கி இருக்கிறது


🌾 இன்றைய பண்புப்பயிற்சி


🌾 தவம் செய்து மனதை தன்மையோடு வைத்து பழக வேண்டும். எல்லாவகையான நேரங்களிலும் நாம் நிதானத்தையும், அமைதியையும், எதார்த்தத்தையும் கடைபிடிக்கவேண்டும். இவ்வாறாக கடைபிடிக்கும் போது நமக்குள் நாம் பயணம் செய்யத் துவங்குவோம். அது கருமையத்தின் வழியாக சென்று இறைவனை சென்று சேரும் ஒரு தெய்வீக பயணமாகும். இந்த பயணத்திற்கு உடல், மனம், உயிர் யாவையும் தயார் செய்வோம். வாழ்க வளமுடன்...

 

🌾 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌾 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌾 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments