வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 14
♻️🎲♻️🎲♻️🎲♻️🎲♻️🎲♻️
🌀 இன்றைய நித்தியக்கடன்
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 இன்றைய சாதகம்
🌀 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🌀 இன்றைய நற்சிந்தனை
🌀 மரமானது இலையுதிர் காலத்தில் மொத்தமாக தன்னிடம் இருக்கும் இலைகளை உதிர்த்து கொண்டு, தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கும் அடுத்த காலத்திற்கு நகருவதற்க்கும் தயாராகிறது. காற்றிலிருந்தும் பூமியிலிருந்தும் சத்துக்களை எடுத்துக்கொள்வதை மரம் முழுமையாக நிறுத்திக் கொள்கிறது. புதியதாக எதிர்வரும் காலத்தினை கணித்து திட்டமிட்டுக் கொண்டு அதற்குத் தக்கவாறு தன்னை தகவமைத்து கொள்வதற்காகவே, இந்த நிகழ்ச்சியானது இலையுதிர் காலங்களில் நடைபெறுகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் எந்த ஒன்றையும் இழக்காமல் மற்றொன்றை பெற இயலாது. ஆகையால் இழப்பதற்கும் பெறுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
🌀 இன்றைய தற்சோதனை
🌀 மனிதர்களுக்கு இதில் ஒரு தனி சிறப்பு உண்டு. எதை பெறவேண்டும் எதை இழக்க வேண்டும் என்று நாம் தீர்மானித்துக் கொள்ள முடியும். நம்மிடம் இருக்கக்கூடிய விலங்கின பதிவுகளும் அவை சார்ந்த பண்பாகிய பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவையெல்லாம் நாம் இழக்க வேண்டியவை. நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர்நிறை உணர்வு, மன்னிப்பு இவைகள் நாம் பெறவேண்டிய பண்புகள். ஆக இந்த அறிவும், திட்டமும், செயல்திறனும் நம்மிடம் எந்த குறைபாடும் இல்லாமல் நிறைவாக வளர்ச்சி பெறுவதற்கு தவம், தற்சோதனை, உடற்பயிற்சி, காயகல்பம் அனைத்தையும் நாள் தவறாமல் செய்து உயர்வு பெறவேண்டும்.
🌀 இன்றைய பண்புப்பயிற்சி
🌀 பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நீதியாகும். இந்த நீதிக்கு ஒத்த முறையில் நாம் நம்மை தகவமைத்துக் கொள்ளவேண்டும். நான் எதையும் இழப்பதற்கு தயாராக இல்லை, இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும், என்று எண்ணினால் அது தவறு. இவ்வாறான எண்ணமுடையவர்கள் அவர்களுக்கு எதிராக இயற்கை (இறைவன்) செயல்படுவதாக அவர்கள் உணர்வார்கள். ஆக இயற்கை பாரபட்சம் இல்லாது இயற்கைக்கு தேவையானது தேவையில்லாதது என்று எதுவுமே இல்லை. நாம் முடிவெடுத்து அதை செயல்படுத்த முனைந்தால் அதற்கு இயற்கை சரியான ஒத்துழைப்பை நல்கும். ஆனால் உங்களுடைய முடிவு இயற்கைக்கு பொருந்தும் படியாய் இருத்தல் வேண்டும். வாழ்க வளமுடன்...
🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment