நித்தியக்கடன் டிசம்பர் 11 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 11


🔶🌐🔶🌐🔶🌐🔶🌐🔶🌐🔶


♻️ இன்றைய நித்தியக்கடன்


♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♻️ இன்றைய சாதகம்


♻️ ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.

 

♻️ இன்றைய நற்சிந்தனை


♻️ நீங்கள் வாழும் இந்த பூமி, நீங்கள் செய்யும் தொழில், உங்களிடம் இருக்கும் பொருள், புகழ், அதிகாரம் இவை எதுவுமே உங்களிடம் நிரந்தரமாக இருக்கப் போவதுகிடையாது. நேற்று வேறொருவரிடம் இருந்தது, இன்று உங்களிடம் இருக்கிறது. இன்று உங்களிடம் இருப்பது நாளை வேறு ஒருவரிடம் இருக்கப்போகிறது. இதுபோலவே வித்து தொடராக வந்திருக்கும் நாமும் நமக்குள் எழக்கூடிய  எண்ணங்களும், நேற்று வேறொருவரிடம் இருந்தது இன்று நம்மிடம் நம் எண்ணமாக இருக்கிறது. இந்த உண்மையை உங்களுடைய அடி மனதிற்குள் போய் அங்கே வாழ்ந்து ஆய்வு செய்து உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள்.


♻️ இன்றைய தற்சோதனை


♻️ தற்சோதனை என்பது நமக்குள் இருக்கும் தேவையில்லாதவைகளை அகற்றி  களையெடுத்தல் ஆகும். அகற்றுவதற்கும் களை எடுப்பதற்கும் தயக்கம் காட்டினாலோ அல்லது தள்ளிப் போட்டாலோ அதனுடைய துன்பத்தை அனுபவிக்க போவது வேறு யாரோ அல்ல நீங்களேதான். ஒன்றே செய்! ஒன்றும் நன்றே செய்! அதையும் இன்றே செய்


♻️ இன்றைய பண்புப் பயிற்சி


♻️ எந்த ஒன்றை பெற வேண்டுமானாலும் அதற்கு ஈடு இணையாக மற்றொன்றை இழந்தே தீரவேண்டும். பெறுவதற்கு முயற்சி செய்யும்போது இழப்பதற்கும் துணிவு வேண்டும். அந்தத் துணிவை வளர்த்துக் கொள்ளும் பண்பு தான் ஆன்மீகத் துறையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை தெளிவாக புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...

 

♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


♻️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments