வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 04
🌾🚥🌾🚥🌾🚥🌾🚥🌾🚥🌾
⛳ இன்றைய நித்தியக்கடன்
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ இன்றைய சாதகம்
⛳ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
⛳ இன்றைய நற்சிந்தனை
⛳ மாற்றம் என்பது நிச்சயமாக உண்டு மாற்றம் இல்லாமல் எதுவுமே கிடையாது. மனித வாழ்க்கையில், ஆன்மீக வாழ்க்கையில், நல்ல மாற்றங்களை நாமாக தேர்வு செய்து கொண்டு அதை நோக்கி ஆழமாக, உறுதியாக, வைராக்கியத்தோடு நகர வேண்டும். இந்த நகர்வு தான் நமக்கான உயிரியல் உண்மைகளை, இயற்கையின் உண்மைகளை தெளிவாக விளக்கக்கூடிய தளமாக அமையும்.
⛳ இன்றைய தற்சோதனை
⛳ இந்த தளத்தை உருவாக்கிக் கொள்ளுதல் என்பது ஒன்றும் பெரிய காரியம் கிடையாது. அமைதியாக, நிதானமாக, உடற்பயிற்சி, காயகல்பம், தவம் இவைகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்குள் இயல்பாகவே இந்த தளம் அமைந்துவிடும். இந்த தளத்தில் தான் தற்சோதனை நம்மை சிறப்பாக வழி நடத்தும், ஒரு வழிப் பாதையாக உருவாகிறது. தற்சோதனையை மட்டும் எந்தவொரு நொடியிலும் கைவிட்டு விடாதீர்கள்.
⛳ இன்றைய பண்புப் பயிற்சி
⛳ நம்மை நாமே உற்று நோக்கக் கூடிய பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பண்பு தான் நாம் எங்கிருந்து எதை விட்டு பிரிந்து வந்தோமோ, அதனிடம் நம்மை கொண்டு சேர்க்கும் சிறப்புமிக்க மனப்பக்குவமாக உயர்வு பெறுகிறது. இந்த மனப்பக்குவம் தான் நாளுக்கு நாள் நமக்குள் வளர்ந்து, தழைத்து. ஞானமாக நமக்குள் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கப் போகிறது. நம்மை நாம் கண்காணிக்கும் பண்பே ஞான பண்பாகும். வாழ்க வளமுடன்..!
⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
⛳ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment