வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 07
📊🕸️📊🕸️📊🕸️📊🕸️📊🕸️📊
🌀 இன்றைய நித்தியக்கடன்
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 இன்றைய சாதகம்
🌀 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🌀 இன்றைய நற்சிந்தனை
🌀 எதனோடு நம் மனம் இணையவில்லையோ அதைப் பற்றிய தெளிவும், அதைப்பற்றிய அறிவு உயர்வும் நமக்கு இருக்காது. உங்களுடைய மனதை எதனோடு இணைத்திக் கொள்ள வேண்டும், எதை நீங்கள் உணர வேண்டும், எதை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெறுவதற்கு தேடல் மிகவும் முக்கியமானது. உங்களுடைய எண்ணம் மட்டும் தான் உண்மை என்று நம்பி உங்களிடம் நீங்களே ஏமாந்துவிடாதீர்கள்.
🌀 இன்றைய தற்சோதனை
🌀 பொருத்தமானது, பொருத்தமில்லாதது, என்பதை எல்லாம் உங்களுடைய அறிவின் கீழே இருந்து சிந்திக்கிறீர்கள். உங்களுடைய அனுபவ அறிவுக்கு கீழ்தான் உங்களால் சிந்திக்க முடியும், செயல்பட முடியும். எப்போதும் அறிவை வளர்ச்சி நிலையிலேயே வைத்துக் கொண்டு வாழ முனைய வேண்டும். இந்த முயற்சி அறிவை எப்போதும் நமக்கு உயர்த்தி கொண்டே இருக்கும். தற்சோதனை இதனால் மட்டும்தான் நாம் தனித்துவம் பெற முடியும்.
🌀 இன்றைய பண்புப்பயிற்சி
🌀 நமக்கு தெரிந்தது மட்டும் தான் உண்மை என்று நம்பும் மனம், செயல்படாமல் சிந்திக்காமல் நின்று விட்டது என்றே பொருளாகும். படித்து உணர்ந்து கொள்ளும் அறிவு சுய ஆராய்ச்சியில் தன்னை இணைத்துக் கொண்டு உயர்வு பெறும் அறிவு பல்வேறுபட்ட நிலைகளில் இயங்குகிறது. சொந்த முயற்சியினால் வாழ்வை ஆராய்ந்து எண்ணம், சொல், செயல் மூன்றையும் ஒழுங்கு செய்து கொள்ளும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment