💢🌐💢🌐💢🌐💢🌐💢🌐💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூலை 28*
💢🌐💢🌐💢🌐💢🌐💢🌐💢
📊 *இன்றைய நித்தியக்கடன்*
📊 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
📊 *இன்றைய சாதகம்*
📊 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
📊 *இன்றைய நற்சிந்தனை*
📊 அனுக்களின் வகைகளை மொத்தம் 92 தத்துவங்கள் என்ற பெயரில் சித்தர்கள் அவர்களுடைய பல நூல்களில் பதிவு செய்திருக்கிறார்கள், பேசியுள்ளார்கள். விஞ்ஞானத்தின் அதே அனுக்களின் வகைகளை தற்போது 103 elements என்று கண்டறிந்திருக்கிறார்கள். இவை அனைத்தும் அணுக்களின் கொத்து இயக்க வகைகள் (elements). இந்த வகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பண்புகளை, தன்மைகளை உடையது. பல்வேறுவிதமான ரகசியங்களை இவைகளுக்கு இருக்கின்றன.
📊 *இன்றைய தற்சோதனை*
📊 இந்த அனுக்களின் வகைகள் பெரும்பாலும் நம் உடலுக்குள் இருக்கின்றன. உடலுக்கு வெளியே இப் பூமியிலும் பிரபஞ்சத்திலும் இருக்கின்றன. இவ்வாறு உள்ளும் புறமும் இருக்கும் இந்த மூலகங்களை, அனுக்களின் வகைகளை, மனப்பயிற்சி மூலம் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். மனதினை கொண்டு அவைகளை கவனிக்கும் போது, அதற்கும் நமக்குமான உறவு பலப்படும். ஒன்று மற்றொன்டோடு தனக்குள்ளாக உள்ள பதிவுகளை பகிர்ந்து கொள்கிறது. இந்த செயல்பாட்டில் தான் விஞ்ஞான கண்டுபிடிப்புகளென்றும், மெய்ஞான அனுபவமென்றும் உலகியல் வாழ்வில் பேசப்படுகிறது.
📊 *இன்றைய பண்புப்பயிற்சி*
📊 இந்த அனுபவம் ஏற்பட வேண்டுமானால், நாம் மனதை அதற்கு என்று பக்குவப்படுத்த வேண்டும். அந்த நிலையிலேயே மனதை எப்போதும் நிலை பெறசெய்ய வேண்டும். எல்லாவகையிலும் உடல், உயிர், மனம், அறிவு இவை அனைத்தும் உயர்ந்த நிலையில் நிலைபெற்று இயங்கும் போதுதான், இந்த காந்த பரிவர்த்தனை நடைபெறும். இதில் சிறிதேனும் தரம் குறைந்தாலோ , தன்மை மாறினாலோ இந்த காந்த பரிவர்த்தனையிலும் அனுபவம் மாறும். உண்மையான இறைஞான அனுபவம் பெற அனைத்து வகையிலும் உண்மையாய் வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
📊 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
📊 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
📊 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment