நித்தியக்கடன் ஜூலை 25 2022

♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூலை 25*

♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️

🔘 *இன்றைய நித்தியக்கடன்*

🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🔘 *இன்றைய சாதகம்*

🔘 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🔘 *இன்றைய நற்சிந்தனை*

🔘 ஆசையோடு நீங்கள் வாங்கி வந்த எதுவாயினும் சரி காலம் கொஞ்சம் கொஞ்சமாக நகர, நகர அப்பொருளின் தன்மையும், தரமும் மாறும் அது மாறாமல் அப்படியே இருக்க போவது கிடையாது. அது அவ்வாறு மாறும் போது உங்களுடைய மனம் வருத்தத்தை சந்திக்கிறது. இதற்கு பெயர்தான் "கடும்பற்று"

🔘 *இன்றைய தற்சோதனை*

🔘 இயற்கையினுடைய உண்மையை உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த ஒன்றுமே மாற்றத்துக்கு உட்பட்டதேயாகும். எந்த ஒன்றும் இந்த பிரபஞ்சத்தில் மாறித்தான் ஆகவேண்டும். வந்ததுபோலவே அப்படியே இருந்துவிட முடியாது. இதைத் தெள்ளத் தெளிவாக மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு தற்சோதனையில் வழியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

🔘 *இன்றைய பண்புப் பயிற்சி*

🔘 ஓடுகின்ற தண்ணீர் அது எங்கிருந்து துவங்கி ஓடி வந்து கொண்டு இருக்கிறதோ, அது வந்த வழியில் உள்ள அனைத்தையும், அனைத்தினுடைய தன்மையையும் சேர்த்துதான் கொண்டு வரும். இதில் தேவையானதும் இருக்கலாம், தேவையில்லாததும் இருக்கலாம். இதனைஎல்லாம் தெளிவாக உணர்ந்து, சிந்தித்து வாழும் பண்பில் உயர வேண்டும். அன்பே இறை ஞானத்தை நோக்கி நம்மை நகர்த்தும். வாழ்க வளமுடன்...

🔘 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔘 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔘 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments