வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 02
♾️♨️♾️♨️♾️♨️♾️♨️♾️♨️♾️
🌠 இன்றைய நித்தியக்கடன்
🌠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌠 இன்றைய சாதகம்
🌠 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌠 இன்றைய நற்சிந்தனை
🌠 எண்ணங்கள் எழுவதற்கான காரணங்கள் ஆறு வகைப்படும். அவை தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் மனத்தூண்டுதல், கருவமைப்பு, தெய்வீகம். எண்ணங்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய பயிற்சி மேற்கொண்டு, இந்த எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களை கண்டுபிடியுங்கள். இதற்காகவே வேதாத்திரி மகரிஷி இந்த எண்ணத்தை ஒழுங்குபடுத்தும் பயிற்சி முறையை வழங்கியிருக்கிறார்கள்.
🌠 இன்றைய தற்சோதனை
🌠 நல்ல எண்ணங்களை செயல்படுத்த வேண்டுமானால், அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். ஆரோக்கியமான எண்ணத்தை, ஆரோக்கியமான உடலை கொண்டு திறமையாக செய்து முடித்து விடலாம். ஆதலினால் உடலுக்கு உடற்பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஐந்தில் அளவு முறையைப் பின்பற்றியே ஆக வேண்டும்.
🌠 இன்றைய பண்புப்பயிற்சி
🌠 உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம், இந்த ஐந்திலும் அளவு முறையை பின்பற்றினால் மட்டுமே, உடல் ஆரோக்கியம் என்பது அமையும். ஐந்திலும் எவரொருவரும் அளவு முறையை மீறி விடக்கூடாது. மீரும் பட்சத்தில் உடல் பாதிக்கப்படும். உடலால் மனமும் பாதிக்கப்படும், ஆக உயிர் பலம் இழந்து விடும். ஐந்தில் அளவு முறையை பின்பற்றும் பண்பினை ஒவ்வொரு கணமும் கடைபிடித்து கடைத்தேறுவோம். காயகல்ப பயிற்சியினை கருத்தினால் நிறுத்தி கவனமாய் ஓஜஸ் ஆற்றலோடு ஒன்றிணைவோம். வாழ்க வளமுடன்...
🌠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌠 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment