நித்தியக்கடன் ஜூன் 09 2022

🔶♻️🔶♻️🔶♻️🔶♻️🔶♻️🔶

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 09*

🔶♻️🔶♻️🔶♻️🔶♻️🔶♻️🔶

🎲 *இன்றைய நித்தியக்கடன்*

🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎲 *இன்றைய சாதகம்*

🎲 வியாழக்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
🎲 *இன்றைய நற்சிந்தனை*

🎲 ஒரு மல்லிகை செடியின் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்தாலோ, அல்லது ரோஜா செடியின் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்தாலோ, அதில் ரோஜா வாசமோ, மல்லிகை வாசமோ வீசுவது இல்லை. பூவில் இருக்கும்வாசம் அதன் இலைகளுக்கு அதன் கிளை குச்சிகளுக்கு கிடையாது. இதுபோல இந்த பிரபஞ்சம் எனும் நந்தவனத்தில் இறுதியாக பூத்த மலர் மனிதன் என்று வேதாத்திரி மகரிஷி மகிழ்ச்சியோடு கூறுவார்கள்.

🎲 *இன்றைய தற்சோதனை*

🎲 நல்ல மண்வளமும் நல்ல உரமும் கிடைத்தால், அந்த செடி மரம் சிறப்பாக வளர்ச்சி பெறும். மனதிற்கும், உடலுக்கும், உயிருக்கும் உரம் போலத்தான் நமது மனவளக்கலை பயிற்சியை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அன்போடு வழங்கியிருக்கிறார்கள். இந்த பயிற்சியினை நாள் தவறாமல் செய்து கொண்டே உங்களுடைய ஐவகையான கடமைகளிலிருந்து, விலகி விடாமல் அவ்வப்போது தற்சோதனை செய்து உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

🎲 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎲 இந்த மனித மனதை பண்படுத்தி, அதற்குள் இருக்கும் ஞானத்தை ஒளிரச் செய்துவிட முடியும். அவ்வாறாக செய்து கொண்டால் மட்டுமே தான். இந்த ஞான பிறவி முழுமை பெறும். ஞானத்தில் முழுமை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் மனிதனுக்குள் உள்ளடக்கமாக இருக்கிறது. அவைகளை முறையான பயிற்சி மூலம் மட்டும்தான் வெளியே மலரச் செய்ய முடியும். அன்பும் கருணையும் இயல்பாக அமைந்த மனம் ஞானத்தை நோக்கி நகர்த்துவோம். வாழ்க வளமுடன்...

🎲 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎲 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments