நித்தியக்கடன் ஜூன் 07 2022

🔺🔘🔺🔘🔺🔘🔺🔘🔺🔘🔺

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 07*

🔺🔘🔺🔘🔺🔘🔺🔘🔺🔘🔺

♻️ *இன்றைய நித்தியக்கடன்*

♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

♻️ *இன்றைய சாதகம்*

♻️ செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
♻️ *இன்றைய நற்சிந்தனை*

♻️ ஒரு காடு நிறைய ரகசியங்களை தனக்குள்ளாக வைத்திருக்கிறது. காட்டுவழிப் பாதையில் பயணம் செய்யும்போது மனம் கொஞ்சம் அச்சத்துடனே இருக்கும். இந்த காட்டில் உள்ள சூழ்நிலை நம்மை கொஞ்சம் பயமுறுத்துகிறது. கொடிய விலங்குகளும், விஷப்பூச்சிகளும் இருக்கும் என்ற அச்சம். இவைகளால் நமக்கு ஆபத்து என்ற உணர்வின் வெளிப்பாடு இந்த அச்சம். இந்த அச்சம் இயற்கைக்கும் நமக்கும் இடையே இணக்கத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது. ஜீவகாந்தமும், வான்காந்தமும் எல்லா நிலைகளிலும் இணைந்து இயங்கினால் இந்த அச்சம் ஏலாது.

♻️ *இன்றைய தற்சோதனை*

♻️ இந்த அச்சம் உண்மையில் தேவையில்லாதது நாம் இந்த சூழ்நிலைகளை எதிர் தன்மையில் இருந்து வாழும்போது நமக்கு அச்சம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலைகளை வைத்து அதனோடு இணைந்து நாம் நம்முடைய ஜீவகாந்தத்தை இயக்கி பழகியிருந்தால் இந்த அச்சம் நமக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஜீவகாந்தத்தை இயற்கையோடும், இயற்கையின் அனைத்து நிலைகளோடும் இணைத்து இயக்கி பழகுங்கள், ஆழமாக தற்சோதனை செய்யுங்கள் இவைகளைப்பற்றி.

♻️ *இன்றைய பண்புப் பயிற்சி*

♻️ எதிர்மறையாக இருந்து சிந்தித்து செயல்பட்டு வாழும் தன்மையில் இருந்து நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றோடும் இணைந்து இணக்கமாக இருக்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் இயற்கையின் பல்வேறு பட்ட உண்மைகள் புரியவரும். இயற்கை வேறு நாம் வேறு அல்ல இயற்கையும் நாமும் ஒன்றுதான். வாழ்க வளமுடன்...

♻️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♻️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments