🔘🎱🔘🎱🔘🎱🔘🎱🔘🎱🔘
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 04*
🔘🎱🔘🎱🔘🎱🔘🎱🔘🎱🔘
❄️ *இன்றைய நித்தியக்கடன்*
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ *இன்றைய சாதகம்*
❄️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
❄️ *இன்றைய நற்சிந்தனை*
❄️ நமக்கு புரியாத ஏதனோடும் நாம் தொடர்பு கொண்டாலோ, அதை பயன்படுத்தினாலோ அது எல்லா காலத்திலும் சரியாக அமையும் என்று சொல்லுவதற்கு இல்லை. புரிந்து ஒரு விஷயத்தை தொடர்பு கொள்வதற்கும் புரியாமல் தொடர்பு கொள்வதற்கும் நடைமுறை வாழ்க்கையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த புரிதல் தான் நமக்கும் அதற்கும் நல்லதொரு நட்பாக இயங்குகிறது.
❄️ *இன்றைய தற்சோதனை*
❄️ புரிதல் இல்லாத நம்மளுடைய முயற்சிகள் அனைத்தும் சந்தேகத்துக்குரியதே. கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம், நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். தெரிந்த ஒரு விஷயத்தை நாம் சரியாக கையாள முடியும். தெரியாததில், அனுபவம் இல்லாததில் நாம் அளவு மீறலாம், முறை மாறலாம். இந்த அளவுமுறை தவறிய செயலின் விளைவு. உடலில் நோய் மனதில் குழப்பம் வாழ்க்கையில் சிக்கல்கள். இவைகளையெல்லாம் தவிர்ப்பதற்கு தற்சோதனையில் ஆழமாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
❄️ *இன்றைய பண்புப் பயிற்சி*
❄️ மனதை அமைதியான நிலையில் எப்போதுமே இருக்கும் படியாக வைத்துக் கொள்வதே நம்முடைய வாழ்க்கைக்கு சிறப்பானது. நமக்கு உள்ளும், புறமும் இருக்கக்கூடிய விஞ்ஞானத்தை, மெய்ஞான தத்துவத்தை (கோட்பாட்டை) மாறாமல் அப்படியே புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் தான் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும், வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுத்திக்கொள்ளாமல் வாழ்வதற்கும். மிகவும் நன்மைதரும்.
❄️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
❄️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
❄️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment