நித்தியக்கடன் மே 31 2022

⛳⭕⛳⭕⛳⭕⛳⭕⛳⭕⛳

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 31*

⛳⭕⛳⭕⛳⭕⛳⭕⛳⭕⛳

🍥 *இன்றைய நித்தியக்கடன்*

🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍥 *இன்றைய சாதகம்*

🍥 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🍥 *இன்றைய நற்சிந்தனை*

🍥 மனம் உங்களை ஏமாற்றும், மாயைகள் செய்யும், வழிநடத்தும், வழிகாட்டும், உணர்ச்சிவயப்பட்ட நிலைகளில் இயக்க ஆர்வம் காட்டும், இன்னும் பிற மாயைகள் செய்யும். மனதின் பல்வேறு முகங்களை அந்தந்த காலகட்டத்தில் சரியாக உணர்ந்து கொண்டு, அவற்றை ஒழுங்குமுறை படுத்தா விடில் வாழ்க்கை ஒரு மாயாஜால வித்தையாகவே அமைந்துவிடும்.

🍥 *இன்றைய தற்சோதனை*

🍥 புலனியக்க மயக்கப்பதிவுகள் தறதறவென்று இழுத்துச் செல்லும். ஞானத்தை நோக்கிய பயணத்தில் அங்குள, அங்குளமாகத்தான் செல்லமுடியும். இந்த உண்மையை ஏற்றுக் கொண்டு. அறிவின் கீழ் இயங்கும் போது மனதிற்கு அளவிடமுடியாத ஆற்றலும் திறமையும் மென்மேலும் ஊக்குவிக்கப்படுகிறது. அறிவின் கட்டுப்பாட்டில் மனதை கொண்டு வருவதற்காகவே, மனப்பயிற்சி மற்றும் மனப்பாடம் வேதாத்திரி மகரிஷியால் அன்போடும் அருளோடும் வழங்கப்பட்டிருக்கிறது.

🍥 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍥 விடாமுயற்சியோடு அறிவு காட்டும் உண்மையான பாதையில், மனதை செலுத்துவதற்கு தயவுசெய்து பழக்குங்கள். சின்ன சின்ன விஷயங்களில் உதாசீனப்படுத்தாமல், அறிவின் வழிகாட்டுதலின் படி மனதை மெல்லமெல்ல இயக்குங்கள். இதுபோன்ற பயிற்சியும், பண்பும் தான் உங்களை நாளுக்குநாள் உண்மையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யும் மெய்ஞானத்திலும் உயர்த்தும். வாழ்க வளமுடன்...
 
🍥 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments