நித்தியக்கடன் மே 26 2022

🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 26*

🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️

🚥 *இன்றைய நித்தியக்கடன்*

🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🚥 *இன்றைய சாதகம்*

🚥 வியாழக்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
🚥 *இன்றைய நற்சிந்தனை*

🚥 பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இதுபோன்ற குணங்களை ரஜோகுணம் தூண்டுகிறது. மந்தபுத்தி, அலட்சியம் இதுபோன்ற குணங்களை தமோ குணம் தூண்டுகிறது. மேல்நோக்கு உணர்வு, மனித நேயம், நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமஉணர்வு, மன்னிப்பு இதுபோன்ற குணங்களை சாத்வீககுணம் தூண்டுகிறது.

🚥 *இன்றைய தற்சோதனை*

🚥 எந்தெந்த உணவுகளை உட்கொண்டால் எது மாதிரியான குணங்கள் தூண்டப்படுகிறது, என்பதை தெளிவாக புரிந்து கொண்டு. அதற்குத் தகுந்த உணவு பழக்க முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அறிவில் முழுமை பெறுவதற்கும் மனித கருமையத்திற்கும் பொருத்தமான உணவு பழக்க முறையையும் திட்டமிட்டு செயலாற்றி நிறைவாக வாழ்வோம் மன ஆர்வத்தோடு முயற்சி செய்ய வேண்டும்.

🚥 *இன்றைய பண்புப்பயிற்சி*

🚥 ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்ற சிந்தனையின் அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையை நாம் திட்டமிட்டு சுயகட்டுப்பாடோடு வாழவேண்டும். இந்த முயற்சியில் நமக்கு பேருதவியாக மனவளக்கலை பயிற்சி முறைகளை அன்றாட வாழ்க்கையில் நினைத்துக்கொண்டு வெற்றியும், மனநிறைவும் காணமுடியும். வாழ்க வளமுடன்...
 
🚥 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🚥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🚥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments