🕸️🔮🕸️🔮🕸️🔮🕸️🔮🕸️🔮🕸️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 20*
🕸️🔮🕸️🔮🕸️🔮🕸️🔮🕸️🔮🕸️
🕳️ *இன்றைய நித்தியக்கடன்*
🕳️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕳️ *இன்றைய சாதகம்*
🕳️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🕳️ *இன்றைய நற்சிந்தனை*
🕳️ உங்களை நீங்கள் எந்த செயலில் அடிக்கடி ஈடுபடுத்திக் கொள்கிறீர்களோ, எதைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்களோ, அதற்கும் உங்களுக்குமான நட்பு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். அது உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். நீங்கள் ஏதேனும் ஒரு செயல்பாட்டில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினால், அதை முழுமையாக உடனடியாக மறந்து விடுங்கள். அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் அதற்கும் உங்களுக்குமான பிணைப்பு தான் அதிகமாகுமே தவிர, அந்த செயலில் இருந்து உங்களை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ள இயலாது.
🕳️ *இன்றைய தற்சோதனை*
🕳️ ஏற்கனவே இருக்கும் ஒரு கோட்டை சிறியதாக்க வேண்டுமானால், அந்த கோட்டுக்கு அருகில் பெரிய கோட்டை வரைந்து விட்டால் போதும் இந்த கோடு தானாகவே சிறியதாகி விடும். பழைய கோட்டை அளிக்கவும் வேண்டாம், அதற்கான காலச் செலவும் வேண்டாம். ஆகவே நீங்கள் செய்யவேண்டிய காரியத்தில் நன்மையான முறையிலும் வகையிலும் அதிகமாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த பழக்கமே நாளடைவில் உங்களை தீயசெயல்பாடுகளில் இருந்து விடுவித்து விடும்.
🕳️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🕳️ மனம் இப்படியும், அப்படியுமாக, எப்போதும் ஓடிக் கொண்டும், சுழன்று கொண்டும் தான் இருக்கும். இதனையடுத்து அலட்சியப்படுத்தி பழகுங்கள் சில நேரங்களில் சில சமயங்களில் காது கேளாதவர் போல, ஊமை போல, குருடர் போல, ஏதும் அறியாதவர் போல இருந்துவிட வேண்டும். இவ்வாறான பண்பில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது, இந்த பண்பு நம்மை நிறைவான ஒரு வாழ்வியலுக்கு நகர்த்தும். வாழ்வோம் வாழ விடுவோம். வாழ்க வளமுடன்...
🕳️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🕳️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🕳️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment