நித்தியக்கடன் மே 16 2022

💢🌍💢🌍💢🌍💢🌍💢🌍💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 16*

💢🌍💢🌍💢🌍💢🌍💢🌍💢

🎑 *இன்றைய நித்தியக்கடன்*

🎑 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎑 *இன்றைய சாதகம்*

🎑 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🎑 *இன்றைய நற்சிந்தனை*

🎑 எந்த பொருளோடு இணைந்தாலும் அந்தப் பொருளின் தன்மை, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு இடம் மாறும். இதனுடைய தன்மை அதற்கும், அதனுடைய தன்மை இதற்கும் பிரதிபலிக்கும். இந்த இயற்கையின் நீதியை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு இதேபோல மனதை எதனோடு நினைக்கின்றோமோ மனம் அதுவாகும் என்ற உண்மையை ஆராய்வோம்.

🎑 *இன்றைய தற்சோதனை*

🎑 இயற்கை பொருள்களோடு மனதை இணைத்துக் கொண்டால், அதனுடைய தன்மைகள் மனதிற்கு நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும். அறிவில் கூறிய சிந்தனைத் திறனும் நேர்மையான வாழ்க்கைத் திட்டத்தையும் வகுத்து கொண்டு இல்லறத்தை நல்லறமாய் காத்து வாழலாம்.

🎑 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎑 பெறுவதற்கும் இழப்பதற்கும் நிறைய இருக்கிறது. பெற வேண்டியதை பெறும்போது விளக்க வேண்டியது தானாகவே நம்மை விட்டு அகன்று போகும். பெற வேண்டியது என்ன இறைஞானம் அப்பழுக்கில்லாத செயல் பண்புகள். விலக்க வேண்டியது என்ன இதற்கு நேர் எதிரான விலங்கின பதிவுகள் அவை சார்ந்த செயல் பழக்கவழக்கங்கள். பெருக்குவோம் இறை ஞானத்தை. இழப்போம் விலங்கின பதிவுகளையும் அதுசார்ந்த நிலைகளையும். வாழ்க வளமுடன்...

🎑 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎑 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎑 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments