நித்தியக்கடன் மே 14 2022

🕳️🔰🕳️🔰🕳️🔰🕳️🔰🕳️🔰🕳️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 14*

🕳️🔰🕳️🔰🕳️🔰🕳️🔰🕳️🔰🕳️

💦 *இன்றைய நித்தியக்கடன்*

💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

💦 *இன்றைய சாதகம்*

💦 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
💦 *இன்றைய நற்சிந்தனை*

💦 நான் நானாக வாழ்வது என்றால் என்ன..? என் இஷ்டப்படி என் உணர்வில், என் எண்ணத்தில் எழும் உணர்வுகளுக்கெல்லாம் என் செயலை செய்து கொண்டு வாழ்வதா..? என்றால் இல்லை உங்களால் உங்களுக்கே துன்பம் ஏற்படாத அளவிலும், முறையிலும் வாழ்வதே ஆகும். எல்லா வகையான செயல்களுக்கும் நிச்சயமாக விளைவு இருக்கிறது இந்த விளைவை சிந்தித்து உங்களுடைய எண்ணம், சொல், செயல் இவைகளை வடிகட்டுங்கள்.

💦 *இன்றைய தற்சோதனை*

💦 தற்சோதனை எனும் வடிகட்டியை பயன்படுத்துங்கள் இந்த வடிகட்டியை எப்படியெல்லாம். எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறிர்களோ. அதிலிருந்தெல்லாம் உங்களுக்கு நன்மையே விளையும். உங்களுடைய மன நிறைவுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த தற்சோதனை வடிகட்டி மிகவும் முக்கியமானது அவசியமானது.

💦 *இன்றைய பண்புப் பயிற்சி*

💦 எண்ணியபடி எல்லாம் வாழ்ந்து விட்டுப் போவது கிடையாது மனிதனுடைய வாழ்க்கை. இதற்கு ஆறாவது அறிவு தேவையில்லை உணர்ச்சியில் வாழ்வதைத் தவிர்த்து உணர்வுநிலையில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். உணர்வு எனும் பண்பில் அளவு முறையோடு உங்களுடைய எண்ணத்தை, செயலை, வார்த்தைகளை பழக்குங்கள் உணர்வோடு செயல்பட்டு சிந்தித்து, பேசி உங்களுக்குள்ளிருக்கும் உயிரோடு பழகிப் பாருங்கள் இதில் கிடைக்கும் பேரின்பத்திற்கு ஈடாக இவ்வுலகிலும், பிரபஞ்சத்திலும் எதுவுமே கிடையாது. வாழ்க வளமுடன்...

💦 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💦 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💦 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments