நித்தியக்கடன் மே 13 2022

🔘💠🔘💠🔘💠🔘💠🔘💠🔘

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 13*

🔘💠🔘💠🔘💠🔘💠🔘💠🔘

♻️ *இன்றைய நித்தியக்கடன்*

♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

♻️ *இன்றைய சாதகம்*

♻️ வெள்ளிக்கிழமை 
காலை:-  
மாலை:-சாந்திதவம்
 
♻️ *இன்றைய நற்சிந்தனை*

♻️ ஒரு மின்விசிறி அதற்குள்ளாக இயங்கும் மின்சார அளவுக்கு ஏற்ப வேகமாகவும் மெதுவாகவும் சுழலும். இந்த சூழற்சிக்கு தக்கவாறு காற்றை வெளிப்படுத்தும். இதுபோலவே ஒரு மனிதனுக்குள் இருக்கக்கூடிய ஜீவகாந்த அளவுக்கு ஏற்பவே அவருடைய மன வலிமையும் உடல் வலிமையும் அமைகிறது. சரியான இலக்கை கணித்துக் கொண்டு அதை நோக்கி பாய்ச்சப்படும் அம்பு போல ஜீவகாந்தம் பெருகிய நிலையில் உள்ள மனம் வலிமையோடு செயல்படும்.

♻️ *இன்றைய தற்சோதனை*

♻️ இந்த ஜீவகாந்தத்தை எதைக்கொண்டு அளப்பது, அல்லது அளவிடும் கருவி ஏதேனும் இருக்கிறதா என்றால் இருக்கிறது அது தான் மனம். மனதை கொண்டே அதை அளவிட்டு விடலாம். நாள் தவறாமல் பயிற்சி முறைகளை சீராக செய்து உணர்ச்சிவயம், கவலை, சினம் இவைகள் எழாமல் பார்த்துக் கொண்டால் ஜீவகாந்தம் போதியஅளவு உடலில் நிறைவாகவே இருக்கும். செய்யும் செயல்கள் அனைத்தும் சுலபமாக புத்துணர்வோடு இருப்பதை உணர முடியும்.  

♻️ *இன்றைய பண்புப்பயிற்சி*

♻️ மௌனத்தை மேற்கொண்டு உணர்ச்சி வயப்படாமல் கவலையில்லாமல் சினம் இல்லாமல் இருந்து அதனுடைய நன்மைகளைப் பற்றி சீராக சிந்தித்து எழுதுங்கள். அவைகளை எழுதிவிட்டு மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். மௌன நோன்பு உங்களை உங்களுக்கு அடையாளம் காட்டக் கூடிய சிறப்பான செய்முறை பயிற்சி. வாழ்க வளமுடன்...
 
♻️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♻️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments