நித்தியக்கடன் மே 08 2022

🔺🌐🔺🌐🔺🌐🔺🌐🔺🌐🔺

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 08*

🔺🌐🔺🌐🔺🌐🔺🌐🔺🌐🔺

🔶 *இன்றைய நித்தியக்கடன்*

🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🔶 *இன்றைய சாதகம்*

🔶 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🔶 *இன்றைய நற்சிந்தனை*

🔶 நாம் நம் எண்ணத்துக்கு அப்பால் நம்மை கொண்டு செல்ல மற்றும் நகர்த்த முயற்சிக்கின்றோம். இதில் என்ன ஒரு வியப்பு என்றால் எண்ணம் அனுமதி கொடுக்காமல், நாம் எண்ணத்திற்கு அப்பால் செல்லமுடியாது. எண்ணத்தை கடப்பதற்கு எண்ணத்தினுடைய அனுமதி மிகவும் அவசியமாகும். எண்ணம் என்றால் என்ன? என்று புரிந்து கொள்ளாமல் எண்ணத்தை கடக்க இயலாது.

🔶 *இன்றைய தற்சோதனை*

🔶 நமக்கு எழக்கூடிய எண்ணங்கள் எல்லாமே நமக்கு சொந்தமில்லை. சஞ்சித, பிராரப்த கர்மம் அடிப்படையில் நமக்கு பல வகையான எண்ணங்கள் தூண்டப்படுகின்றன. சந்தர்ப்ப சூழ்நிலை, பிறர் மனத்தூண்டுதல், தேவை என எண்ணங்கள் எழக்கூடிய வகையும் முறையும் ஏராளம். இவை அனைத்தையும் தற்சோதனை செய்து ஒரு கோட்பாட்டின் கீழ் உங்களை நீங்கள் வரையறுத்தால் மட்டும்தான் எண்ணத்தை கடக்க முடியும்.

🔶 *இன்றைய பண்புப்பயிற்சி*

🔶 எல்லோரும் முயற்சி செய்யலாம், எல்லோருக்கும் இது சாத்தியமே. இருப்பினும் பொறுமையும், விடாமுயற்சியும், அமைதியும், சகிப்புத்தன்மையும் அளவிட முடியாத அளவிற்கு தேவை. இந்த பண்புகளை உளமாற ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு கட்டத்தையும் கடக்கும் போது தான் உங்களால் எண்ணத்தை ஆராய்ச்சி செய்யவும் எண்ணத்தை புரிந்து கொள்ளவும் எண்ணத்தை கடக்கவும் முடியும். வாழ்க வளமுடன்...

🔶 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔶 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔶 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments