🕊️🌏🕊️🌏🕊️🌏🕊️🌏🕊️🌏🕊️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 01*
🕊️🌏🕊️🌏🕊️🌏🕊️🌏🕊️🌏🕊️
🗺️ *இன்றைய நித்தியக்கடன்*
🗺️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🗺️ *இன்றைய சாதகம்*
🗺️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🗺️ *இன்றைய நற்சிந்தனை*
🗺️ நாடும், நாட்டு மக்களும் சுதந்திரமாக வாழும் போதுதான். அவர்களுடைய எல்லாவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். சுதந்திரமான நல்லாட்சி முறை என்பது. பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, அரசியல் இவை நான்கும் சிறப்பான முறையில் செயல்படுவதே ஆகும். தனிமனித அமைதி காக்கும். உலக அமைதிக்கும் இந்த சுதந்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
🗺️ *இன்றைய தற்சோதனை*
🗺️ ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் அறிவில், ஞானத்தில், சுதந்திரமாக, பூரணமாக வாழ்வது. மனிதனுடைய வாழ்க்கை முறை மற்ற ஜீவராசிகளிருந்து முற்றிலும் மாறுபட்டது. தன்னைத்தானே உணர்ந்து கொள்ளக் கூடிய ஆற்றலும், திறமையும், அறிவும் மனிதர்களுக்குள் உள்ளடக்கமாக இருக்கிறது. தற்சோதனை செய்து மேல் நிலைக்கு கொண்டு வந்து அறிவு சுதந்திரத்தோடு வாழ்வோம்.
🗺️ *இன்றைய பண்புப் பயிற்சி*
🗺️ தன் அறிவில் எல்லா வகையிலும் சுதந்திரமாக வாழ்ந்து. பிறரும் சுதந்திரமாக வாழ நம்மால் ஆன எல்லாவகையான உதவிகளையும் செய்வதே இந்த மனிதப் பிறவியின், வாழ்வின் நோக்கம் ஆகும். இந்த நோக்கத்திலிருந்து அணுவளவும் விலகாமல் வாழும்போதுதான். மனிதன் மனிதனாகிறான் இந்தப் பண்பு நம்மை முழுமையாக நமக்குள் உருவாக்கக் கூடியதுதான் அறிவுச்சுதந்திரம். தன் சுதந்திரத்தையும் பிறர் சுதந்திரத்தையும் காத்து வாழும் பண்பு. வாழ்க வளமுடன்...
🗺️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🗺️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🗺️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment