நித்தியக்கடன் ஏப்ரல் 18 2022

🎱🚥🎱🚥🎱🚥🎱🚥🎱🚥🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஏப்ரல் 18*

🎱🚥🎱🚥🎱🚥🎱🚥🎱🚥🎱

🌍 *இன்றைய நித்தியக்கடன்*

🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌍 *இன்றைய சாதகம்*

🌍 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🌍 *இன்றைய நற்சிந்தனை*

🌍 இந்த பூமி உயிர்களின் வாழ்விடமாக அமைந்திருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் இந்த பூமியில் அமைந்திருக்கக் கூடிய இயற்கை வளம். இது போன்றே மனிதர்களுக்குள் இருக்கும் இயற்கை வளம் பண்புகள். (குணம்) பண்புகள் இல்லாத மனிதன் ஒரு நாளும் ஆன்மீகத்தில் உயர்வை காண முடியாது. சின்ன, சின்ன செயல்கள் மூலம் உங்களுடைய பண்புகளை வெளிப்படுத்துங்கள். உங்களுடைய நடை, உடை, பாவனை இவைகளால் மற்றவர்களை தீய செயலுக்கு திசை திருப்பப்படாமல் உங்களை நீங்கள் ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள். ஞானத்திற்கு இது தான் நம்மை நகர்த்தக்கூடிய உந்து சக்தியாகும், வழித்தடமாகும்.

🌍 *இன்றைய தற்சோதனை*

🌍 நம்முடைய தேவைகளுக்கும், ஈடுபாடுகளுக்கும், ஆர்வத்திற்கும் ஏற்ப நம்முடைய ஜீவகாந்தம், வான்காந்தக் களத்தோடு மூளை செல்கள் வழியாக சிறப்பாக செயல்படுவதே. பேரறிவின் இயக்கம், உள்ளுணர்வு ஆகும். ஆன்மீகத்தில் முன்னேற்றத்திற்கு ஈடுபாடும், தன்னார்வம், தற்சோதனை மிகவும் முக்கியம். என்பதை உணர்ந்து கொள்வீர்களாக.

🌍 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌍 விட்டுக் கொடுத்தல் என்ற பண்பில் உயர்வு பெறுவோம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழும் போது தான். உண்மையான இறை ஞானம் வெளிப்படும். உங்களுக்குள் இருக்கக்கூடிய தேவையில்லாதவைகளை உங்களிடமிருந்து நீங்களே விட்டுக் கொடுங்கள். இந்த விட்டுக் கொடுக்கும் பண்பு உங்களுக்குள்ளிருந்து துவங்குங்கள். இது உங்களுக்குள் துவங்கி சுத்தவெளியில் முடியும்.
 
🌍 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌍 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments