நித்தியக்கடன் ஏப்ரல் 12 2022

⛳🎱⛳🎱⛳🎱⛳🎱⛳🎱⛳

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஏப்ரல் 12*

⛳🎱⛳🎱⛳🎱⛳🎱⛳🎱⛳

🍂 *இன்றைய நித்தியக்கடன்*

🍂 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍂 *இன்றைய சாதகம்*

🍂 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🍂 *இன்றைய நற்சிந்தனை*

🍂 நமக்கு இன்று அமைந்திருக்கக் கூடிய வாய்ப்பு, வசதி, விஞ்ஞான வளர்ச்சி, (வேகவாகனங்கள், வானூர்தி, கப்பல், ரயில், கணினி, வலைதலங்கள், அலைபேசி) என எண்ணிலடங்காதவைகள். இவை அனைத்தும் இல்லாமல் இருந்த காலம் ஒன்று இருக்கிறது. அந்த காலத்தில் நாம் பிறந்திருந்தால், கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்ப்போம். நம்முடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும். இந்த மெய்ஞான, விஞ்ஞான யுகத்தில் எல்லாமும் தேவைதான் ஆனால் அவை அனைத்திலும் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனதை மயங்கவிடாமல் விழிப்பு நிலையிலேயே பழக்க வேண்டும். 

🍂 *இன்றைய தற்சோதனை*

🍂 இன்று இருக்கக்கூடிய வாய்ப்புகளும் வசதிகளும் நாம் எவ்வாறு பயன்படுத்தி வருகிறோம். இவைகளில் அளவுக்கு மீறிய பயன்பாடு நம்மை நிலைகுலைய செய்கிறது. மனம்விட்டு வீட்டில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது கூட படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவைதான் ஆனால், அந்த மாற்றங்கள் நல்ல தன்மைகளை இயற்கை அமைப்புகளை கெடுத்து விடக்கூடாது. ஐந்தில் அளவு முறை காப்பதோடு இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விஞ்ஞான கருவிகளை அளவு முறையோடு பயன்படுத்துதல்.

🍂 *இன்றைய பண்புப் பயிற்சி*

🍂 ஒழுங்கற்ற நிலையிலிருந்து துவங்கி ஒரு ஒழுங்கான அமைப்பின் கீழ் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் பண்பாடு, கலாச்சாரம். இந்த பண்பாட்டை, கலாச்சாரத்தை நிலைகுலையச் செய்து விடக்கூடாது. அதை இன்னும் மெருகேற்றி நம்முடைய அடுத்த சந்ததிகளுக்கு பொக்கிஷமாக வழங்குவோம். வாழ்க வளமுடன்...

🍂 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍂 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍂 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments