🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஏப்ரல் 09*
🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️
🌍 *இன்றைய நித்தியக்கடன்*
🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌍 *இன்றைய சாதகம்*
🌍 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌍 *இன்றைய நற்சிந்தனை*
🌍 இந்த பூமியில் அந்தந்த பகுதிக்கு அடியில் இருக்கின்ற கனிம வளம், நிலப்பரப்பிலுள்ள மூலிகை வளம், பூமியின் மேற்பரப்பில் உள்ள மண்டலங்கள், கடக ரேகை, மகர ரேகை, பூமத்திய ரேகை இவற்றில் எதில் அந்த நிலப்பரப்பில் வருகிறது என்ற கணிதத்திற்கு ஏற்பவும், அந்தந்த பகுதியில் வாழக்கூடிய உயிர் வகைகளுக்கும், மனிதர்களுக்கும் பலவகையான வேறுபாடுகள் இருக்கும். இந்த வேறுபாடுகளுக்கு ஏற்ப தான் அவரவர்களுடைய சிந்தனை, செயல் திறன், அறிவு நுட்பம் இவை அமையும். மற்ற ஜீவ இனங்களைவிட மனித இனம் தனிச்சிறப்பு மிக்கது, பெறும் மதிப்புடையது.
🌍 *இன்றைய தற்சோதனை*
🌍 இயற்கை ஒருபுறம் இவ்வாறு இருக்கையில், நாம் இந்த வளங்களை எப்படி வாழ்வியலுக்கு பயன்படுத்திக் கொள்வது. எந்த ஒன்றையும் நாம் உணர்வதற்கும் அதில் அனுபவம் பெறுவதற்கும் அதற்குத் தகுந்த பழக்கவழக்கங்கள், பண்புகள், தேடுதல்கள் வேண்டும். அப்போதுதான் அதற்கும் நமக்குமான இடைவெளி குறையும். இயற்கையிலிருந்து நாம் எவ்வாறெல்லாம் பிரிந்திருக்கிறோம், எவையெல்லாம் இணைய வேண்டும் என்று தற்சோதனை செய்வோம்.
🌍 *இன்றைய பண்புப் பயிற்சி*
🌍 பிறப்புக்கும் இறப்புக்குமான இந்த வாழ்வியல் போராட்டத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய கால அளவு மிகவும் குறைவு. இந்த குறைந்த கால அளவில் இறை தேடலில் நிறைவு பெறவேண்டும். இந்தப் பிறவியினுடைய நோக்கத்துக்கு தகுந்த செயல் பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். இறைநிலையிலிருந்து வந்த நாம் மீண்டும் இறைநிலையிலேயே கலக்க வேண்டும். என்ற ஆன்மீக சிந்தனை உணர்வோடு வாழ்வை நிறைவாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌍 *இன்றைய மூலிகை*
🌍 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🌍 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🌍 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🌍 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌍 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌍 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment