நித்தியக்கடன் மார்ச் 17 2022

🕸️🌷🕸️🌷🕸️🌷🕸️🌷🕸️🌷🕸️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 17*

🕸️🌷🕸️🌷🕸️🌷🕸️🌷🕸️🌷🕸️

🎲 *இன்றைய நித்தியகடன்*

🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎲 *இன்றைய சாதகம்*

🎲 வியாழக்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
🎲 *இன்றைய நற்சிந்தனை*

🎲 நீரோடு நீர்சேரும், எண்ணெய்யோடு எண்ணெய் சேரும். இது போலத்தான் நீங்கள் எதோடு சேர்கிறீர்களோ நீங்களும் அதுவாகி விடுவீர்கள். உங்களுக்குள் எதை சேர்த்துக் கொள்கிறீர்களோ அதுவாக மாறுகிறீர்கள். உங்களோடு நீங்கள் எதை சேர்த்துகொள்ள வேண்டும், எதை உங்கள் இடத்திலிருந்து விலக்க வேண்டும் என்ற விளக்கத்தோடு வாழ்வில் ஒவ்வொரு கட்டத்தையும் நகர்த்தி பழகுங்கள்.

🎲 *இன்றைய தற்சோதனை*

🎲 உங்களுக்கு உள்ளாக நல்ல பழக்க வழக்கங்களுக்கு எவ்வளவு இடம் கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு, உங்களுக்குள் உங்களுக்கே தெரியாமல் இருக்கக்கூடிய போலி தன்மைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கப்படும். *"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" திருக்குறள்*. எதிலிருந்து எல்லாம் உங்களை நீங்கள் விலக்கிக் கொள்கிறீர்களோ, அதிலிருந்து எல்லாம் உங்களுக்கு துன்பம் கிடையாது. அதுமட்டுமன்றி உங்களுக்குள் நிரப்பப்பட்ட உண்மை மற்றும் சத்தியத்தின் அளவுக்கும் அடர்த்திக்கும் ஏற்ப 
இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய ரகசியங்கள் உங்களுக்கு புரிதலாகும்.

🎲 *இன்றைய பண்புப் பயிற்சி*

🎲 நல்ல பழக்கவழக்கங்களோடும், பண்புகளோடும், வைராக்கியத்தோடும், நம்பிக்கையோடும் வாழவேண்டும். இந்த மனிதப்பிறவி ஒரு புன்னியமான பிறவி. இதை விட்டு விலகி பாவம் செய்தல் கூடாது. நமக்குள் இருக்கும் ஞானத்தை வளர்ப்போம். அதற்கு எதிராக இருக்கும் பொய், சூது, களவு, கொலை, கற்பழிவு இவை அனைத்தையும் தவிர்ப்போம். வாழ்க வளமுடன்...

🎲 *இன்றைய மூலிகை*

🎲 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🎲 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🎲 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎲 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎲 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments