நித்தியக்கடன் மார்ச் 15 2022

⛰️🎯⛰️🎯⛰️🎯⛰️🎯⛰️🎯⛰️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 15*

⛰️🎯⛰️🎯⛰️🎯⛰️🎯⛰️🎯⛰️

☘️ *இன்றைய நித்தியகடன்*

☘️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

☘️ *இன்றைய சாதகம்*

☘️ செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
☘️ *இன்றைய நற்சிந்தனை*

☘️ நீ அதுவாக இருக்கிறாய்! ஆனால் நீ அது கிடையாது! நீ அதுவாக வேண்டுமானால் நீயாக நீ இருக்க கூடாது! அப்படியானால் நீ யார்..? பகவத்கீதையில் வியாசர் இந்த வாசகத்தை சொல்லியிருக்கிறார் இறைநிலையில் இருந்து நாம் வந்திருக்கிறோம். ஆனால் நாம் இறை நிலை கிடையாது. நாம் இறை நிலை ஆக வேண்டுமானால் நம்முடைய நிலைப்பாடு மாற வேண்டும். அப்படி மாறும் பட்சத்தில் நான் இறைநிலையாகவே வாழ முடியும்.

☘️ *இன்றைய தற்சோதனை*

☘️ இறை நிலைக்கும் நமக்குமான வேறுபாடு எதன் மூலமாக அமைந்தது. இந்த நிலைபாடு மாற்றம் பெறுவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன. இறைநிலையில் இருந்து வித்து தொடராக இந்த மனித உருவத்திற்கு வந்திருக்கிறோம். இந்த பாவ பதிவுகள் மாற்றப்படும் போது அங்கே நிலை நிறுத்தப்படுவது இறைநிலை. இதுதான் இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள நிலைப்பாடாக இருக்கிறது.

☘️ *இன்றைய பண்புப் பயிற்சி*

☘️ இருக்கின்ற பாவ பதிவுகளை கழித்துக் கொள்ள வேண்டும். மேலும், மேலும் அவை பெருகாமல் ஞானப் பண்போடு வாழ வேண்டும். அவ்வாறு வாழும்போது நமக்குள் உள்ளடங்கி இருக்கும் இறைதன்மை மேலோங்கத் துவங்கும்.நல்ல செயல் பண்புகள் நாமக்குள் உயர, உயர நாம் அதுவாகவே மாறத்துவங்குவோம். காலம், செயல்திறன், தொடர்பு கொள்ளும் பெருள், இடம், நோக்கம் இவைகளுக்கு ஏற்ப இறை ராஜியத்தில் இணைவோம். இதில் என்னுடைய அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப விளக்கம் கொடுத்திருக்கிறேன். நீங்கள் மேலும் இதில் முயற்சி செய்யுங்கள். வாழ்க வளமுடன்...

☘️ *இன்றைய மூலிகை*

☘️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

☘️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

☘️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

☘️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

☘️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

☘️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments