🍀💫🍀💫🍀💫🍀💫🍀💫🍀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 15*
🍀💫🍀💫🍀💫🍀💫🍀💫🍀
💥 *இன்றைய நித்தியகடன்*
💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💥 *இன்றைய சாதகம்*
💥 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
💥 *இன்றைய நற்சிந்தனை*
💥 இறைநிலையில் அடங்கியிருந்த அனைத்தும் மலர துவங்கியது. அதுவே பஞ்ச பூதங்களாகவும், பிரபஞ்சமாகவும், உயிரினங்களாகவும் வரிசையாக தன்னை முறை படுத்திக் கொண்டு மலர்ந்தது. இறுதியாக தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும், என்ற நோக்கத்தோடு உருவானதே மனித தோற்றமும் வளர்ச்சியுமாகும். இது நீண்ட நெடிய திட்டத்திற்குப் பின்னால் இது உருவானது. இறைவனை உணர்வதற்கான அனைத்து அம்சங்களும் மனிதனுக்குள் உள்ளடக்கமாக இருக்கிறது.
💥 *இன்றைய தற்சோதனை*
💥 முறையான பயிற்சிகள் மூலமாக அடங்கியிருக்கும் இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். இறைவனுக்கும் நமக்குமான இணக்கத் தன்மையை நட்பை படிப்படியாக வளர்த்துக் கொள்ளலாம். முற்காலத்தில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணா, தியானம், சமாதி என்ற அட்டாங்க யோகமாக முற்காலத்தில் நடைமுறையில் இருந்த யோகப் பயிற்சியே தற்காலத்தில் எளிமைப்படுத்தப்பட்டு, எளியமுறை குண்டலினி யோகம் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியிருக்கிறார்.
💥 *இன்றைய பண்புப்பயிற்சி*
💥 இந்த பூமியில் உள்ள கடைக்கோடி மனிதர் வரை முக்தி பெறுவதற்கு இந்த பயிற்சியே போதுமானது. முரண்பாடான சிந்தனைகளும் செயல்களும் இருக்குமேயானால், அவர்களுக்கு இதனுடைய நன்மைகள் முழுமையாக உணர்வுக்கு அனுபவத்திற்கு கிடைப்பதில்லை. முறையாக இந்த பயிற்சியில் தன்னை ஆர்வத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் ஐயம் கொள்ளாமல் பயிற்சியோடு தன்னை இணைத்துக் கொண்டு, பயணிக்கும் எவர் ஒருவருக்கும் முக்தி நிலை சித்திக்கும். வாழ்க வளமுடன்...
💥 *இன்றைய மூலிகை*
💥 *வேப்பிலை* தேவையான பொருட்கள், வேப்பிலை 5, சின்ன வெங்காயம் 1, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும்.
💥 நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.
💥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment