❄️🌿❄️🌿❄️🌿❄️🌿❄️🌿❄️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 05*
❄️🌿❄️🌿❄️🌿❄️🌿❄️🌿❄️
🎭 *இன்றைய நித்தியகடன்*
🎭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎭 *இன்றைய சாதகம்*
🎭 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🎭 *இன்றைய நற்சிந்தனை*
🎭 மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கருவமைப்பு, உணவுவகை, காலம், தேசம், கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி, பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சிகள், பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இந்த 16 காரணங்களுக்கு தக்கவாறு ஒவ்வொரு மனிதர்களும் உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல்வலிவு, சுகம், செல்வம் இந்த ஏழும் மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
🎭 *இன்றைய தற்சோதனை*
🎭 இந்த வேறுபாடுகளை நன்றாக தற்சோதனை செய்து இதனுடைய உண்மைகளையும், நுண்மைகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இவைகளிலிருந்து வேறுபாடான கருத்துக்கள் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை, உங்களுக்குள் நீங்கள் நிம்மதியாக வாழ முடியாது. இந்த வேற்றுமைகள் சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதர்களுக்கிடையே இருக்கவே செய்யும். இதை ஏற்றுக் கொள்வதுதான் இறைநீதியாகும்.
🎭 *இன்றைய பண்புப் பயிற்சி*
🎭 சின்ன சின்ன உண்மைகள் முதல் பெரிய பெரிய உண்மைகள் வரை எல்லாவற்றையும் சிந்தனை செய்யுங்கள். சிந்தனை செய்து அவைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். போலித் தன்மை இல்லாமல் நாம் வாழ வேண்டுமானால் உண்மைகளை நமக்கு அதிகமாக நம் எண்ணம், சொல், செயல் வழியாக வெளிப்படுத்த வேண்டும். உண்மையோடு எப்போதும் உண்மையாய் வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🎭 *இன்றைய மூலிகை*
🎭 எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும். இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.
🎭 பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.
🎭 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎭 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎭 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment