🌀♨️🌀♨️🌀♨️🌀♨️🌀♨️🌀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 27*
🌀♨️🌀♨️🌀♨️🌀♨️🌀♨️🌀
🌿 *இன்றைய நித்தியகடன்*
🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌿 *இன்றைய சாதகம்*
🌿 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌿 *இன்றைய நற்சிந்தனை*
🌿 இறைநிலையினுடைய பல்வேறு தன் மாற்றங்களில் மனித இனமும் ஒன்று. நமக்கு சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அறிவும், சுதந்திரமும் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த சுதந்திரத்தை நாம் தவறாக பயன்படுத்துவதால் உடலில் நோயும், வாழ்க்கையில் சிக்கல்களையும், மனதில் குழப்பத்தையும் உருவாக்கிக் கொள்கிறோம். இதையெல்லாம் நாமாக செய்து கொண்டதே தவிர இறைநிலை நமக்கு எந்த ஒரு துன்பத்தையும் கொடுக்கவில்லை.
🌿 *இன்றைய தற்சோதனை*
🌿 இந்த பூமியில் இந்த மனித தோற்றத்தோடு இறைநிலையின் தன் மாற்ற சரித்திரம் நிறைவுபெறுகிறது. ஆதலினால் நமக்கு முழு சுதந்திரம் பேரறிவால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சுதந்திரத்தை இந்த கட்டமைப்புக்குள் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவைகள் வழியாக துன்பத்தை ஏற்படுத்துவது இல்லை என்பதே அந்த கட்டமைப்பாகும். நன்றாக தற்சோதனை செய்து பாருங்கள் நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
🌿 *இன்றைய பண்புப் பயிற்சி*
🌿 ஒரு வரையறைக்குள் தன்னை ஒழுங்கமைத்து கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் நம்மிடமே கொடுக்கப்பட்டு விட்டது. மற்ற இல்லாத சுதந்திரம் மனித இனமாகிய நமக்கு கொடுக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, நிறைவாக தொண்டு செய்து நமக்கும் நம்முடைய அடுத்த சமுதாயத்திற்கும் நலமே விளைவிக்கும் பண்பினை உளமாற ஏற்று வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌿 *இன்றைய மூலிகை*
🌿 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🌿 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🌿 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌿 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌿 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment