💢⛳💢⛳💢⛳💢⛳💢⛳💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 23*
💢⛳💢⛳💢⛳💢⛳💢⛳💢
🌍 *இன்றைய நித்தியகடன்*
🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌍 *இன்றைய சாதகம்*
🌍 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌍 *இன்றைய நற்சிந்தனை*
🌍 இந்திய தேசம் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். இந்திய நிலப்பரப்பின் கீழ் அமைந்து இருக்கக் கூடிய கனிம வளங்கள், மண்ணின் தன்மைகள், இதன் மேற்பரப்பில் இருக்கக்கூடிய பருவகாலங்கள், இங்கு இருக்கக்கூடிய மரம், செடி, கொடி, மூலிகை இவை அனைத்தும் இந்த தேசத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் ஒவ்வொன்றிற்கும் சிந்தனையை அறிவை வாழ்வின் வளங்களை ஊக்குவிக்கிறது. இந்த மண்ணில் பிறந்த நாம் அனைவரும் பாக்கியசாலிகள்.
🌍 *இன்றைய தற்சோதனை*
🌍 மேலே சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் உடலுக்கும், உயிருக்கும், மனதுக்கும் எவ்வாறு நன்மையே செய்கிறது என்பதை பற்றி தவத்தில் ஆழ்ந்து, ஆழ்நிலையில் விழிப்பு நிலையோடு இருந்து. தவத்தை நிறைவு செய்த பிறகும், இதே நிலையில் நிலைத்து இருந்து பழகுங்கள். இன்நிலையிலையே தற்சோதனை செய்யுங்கள். மீண்டும் மீண்டும் இவ்வாறு பயிற்சி செய்யும் போது, அது வாழ்வியலுக்கு முழுமையாக பயன் தரும்.
🌍 *இன்றைய பண்புப் பயிற்சி*
🌍 சமுதாயத்திலும், தனிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், நடுநிலையோடு இருந்து சிந்தித்து செயலாற்றும் பண்பில் சிறந்து விளங்க வேண்டும். சார்புத் தன்மை இல்லாமல் நாம் சிந்தித்து செயல்படும் போது மட்டும்தான் நமக்குள் இருக்கக்கூடிய உயிரின் தன்மை உயிரோடு நமக்குள் நிறைவாக சுழலும் என்ற உண்மையை உணருங்கள். நடுநிலையோடு எண்ணம், சொல், செயல் இவைகளை வாழ்க்கைச் சூழ்நிலைகளில் தாராளமாக பயன்படுத்துங்கள். இந்த பண்பு ஐயமே இல்லாமல் நம்மை நமக்கு அடையாளப்படுத்த கூடியதாகும். வாழ்க வளமுடன்...
🌍 *இன்றைய மூலிகை*
🌍 *நீராவி பிடித்தல்* குடிநீர் 1,1/2 லிட்டர் நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
🌍 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என அனைத்தும் குணமாகும்,
🌍 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌍 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌍 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment