💢🚥💢🚥💢🚥💢🚥💢🚥💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 21*
💢🚥💢🚥💢🚥💢🚥💢🚥💢
🎲 *இன்றைய நித்தியகடன்*
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎲 *இன்றைய சாதகம்*
🎲 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🎲 *இன்றைய நற்சிந்தனை*
🎲 ஒரு மரத்தின் வேர் தண்ணீர் இருக்கும் திசையை நோக்கி நகரும். அதே மரத்தின் கிளைகள் சூரிய ஒளியை நேக்கி செல்லும். இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சிந்திக்கும்போது அது அதனுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அறிவும், திறமையும் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் முழுமையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இவ்வுண்மை நமக்கு மிகவும் ஆச்சரியமான தாகவே இருக்கும். ஆனால் இது இயல்பூக்க நீதியின் அடிப்படையில் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
🎲 *இன்றைய தற்சோதனை*
🎲 இதே இயல்பூக்க நீதி நமக்குள்ளும் செயல்பட போதுமான பயிற்சி தேவைப்படுகிறது. அந்த பயிற்சியோடு கூடிய முயற்சி நம்மை சிறப்பான நிலைகளை நோக்கி சுலபமாக நகர்த்தும். எல்லாவகையிலும் நம்மை எப்போதும் நாம் தற்சோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். நமக்கு நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் நம்முடைய கருமைய தன்மைக்கு ஏற்ப விளைவுகளாக, வாழ்க்கை சூழ்நிலைகளாக உருவாகிறது என்ற உண்மையை உணர வேண்டும்.
🎲 *இன்றைய பண்புப் பயிற்சி*
🎲 இயற்கையில் கருமையத்தினுடைய தன்மைகள் மாற்றி சீர்திருத்தம் செய்து கொள்ளக் கூடிய முறையிலேயே அமைந்திருக்கிறது. இதை நல்ல பயிற்சி முறைகளை கொண்டும் பழக்கவழக்கங்களை கொண்டும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். எல்லோருக்குள்ளும் ஞானம் விசாலமான தாகவே இருக்கிறது. அதை சரியான முறையில் வளர்த்துக் கொள்ளக் கூடிய பண்புதான் தேவை. அப்பண்பு இது தான் அனைத்தையும் நடுநிலையோடு இருந்து சிந்தித்து செயல் செய்து வாழும் பண்பு. வாழ்க வளமுடன்...
🎲 *இன்றைய மூலிகை*
🎲 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🎲 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🎲 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🎲 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎲 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎲 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment