🌀♾️🌀♾️🌀♾️🌀♾️🌀♾️🌀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 17*
🌀♾️🌀♾️🌀♾️🌀♾️🌀♾️🌀
🎭 *இன்றைய நித்தியகடன்*
🎭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎭 *இன்றைய சாதகம்*
🎭 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🎭 *இன்றைய நற்சிந்தனை*
🎭 மனம் முழுவதும் பலதரப்பட்ட கற்பனைகளை அதாவது இறைவன் இயற்கை உயிர் உடல் மனம் கர்மேந்திரியம் ஞானேந்திதியம் மனித மூளையின் சிறப்பு இவைகளின் இயக்கங்கள் அனைத்தையும் பற்றி அறியாமை அல்லது முரண்பாடான கற்பனைகள் நம் மனதில் நிறைத்து வைத்துக் கொண்டு, அதன் உண்மைத் தன்மைகளை உணர்ந்து கொள்ள முடியாது. நாம் தெரிந்து கொள்ள வேண்டிய புரிந்து கொள்ள வேண்டிய கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன அவைகளை நாம் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
🎭 *இன்றைய தற்சோதனை*
🎭 "கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக" இக் குரலுக்கு ஏற்ப கற்போம். நம்மிடம் இருக்கக்கூடிய பேராசை சினம் கடும்பற்று முறையற்ற பால் கவர்ச்சி உயர்வு தாழ்வு மனப்பான்மை வஞ்சம் போட்டி பொறாமை பகை அறியாமை அலட்சியம் நிதானமில்லாமல் உணர்ச்சி வயப்படுதல் போன்ற இக்கசடுகள் அறுக்கும் சிறந்த பயிற்சியை நாள் தவறாமல் செய்வோம் கற்போம் கசடுகளை அறுப்போம் தற்சோதனை செய்து.
🎭 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎭 தீமையின் காலம் தனியாகவும், நன்மையின் காலம் தனியாகவும் இல்லை. எல்லாவற்றுக்குள்ளும் எல்லாமும் இருக்கிறது. வாய்ப்பு ஒன்று சரியாக அமையும் போது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது சரியான முயற்சியும் பயிற்சியும் தன்னை தானே தகவமைத்துக் கொள்ளக்கூடிய பண்பிலும் உயர்ந்து ஓங்குவோம் பிரித்துணரும் பண்பில் உயர்வோம். நிறை மனம் சகிப்புத்தன்மை ஈகை கற்பு சமநேர் நிறை உணர்வு மன்னிப்பு விட்டுக்கொடுத்தல் சகிப்புத்தன்மை தியாகம் இவைகலாய் நின்று வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🎭 *இன்றைய மூலிகை*
🎭 *சின்ன வெங்காயம்+தேன்*
தேவையான பொருட்கள், சின்ன வெங்காயம் 10 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
🎭 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🎭 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- சின்ன வெங்காயம் சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🎭 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎭 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎭 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎭 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment