நித்தியக்கடன் ஜனவரி 15 2022

💢🕸️💢🕸️💢🕸️💢🕸️💢🕸️💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 15*

💢🕸️💢🕸️💢🕸️💢🕸️💢🕸️💢

🕯️ *இன்றைய நித்தியகடன்*

🕯️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🕯️ *இன்றைய சாதகம்*

🕯️ சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🕯️ *இன்றைய நற்சிந்தனை*

🕯️ எந்த பொருளோடு எந்த தன்மையோடு நம்மை இணைத்துக் கொள்கிறோமோ நம்முடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் எதனோடு இணைகிறது அதனைப் பொறுத்து நம்முடைய தன்மையும் தரமும் மாறுபடும் வேறுபடும் எதை நாம் நினைத்தாலும் நாம் அதுவாகி விடுவோம் என்பதுதான் இயற்கையின் நீதி இதனடிப் படையில் நம்முடைய இந்த பழக்க வழக்கங்களை எதனுடைய அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் நமக்கு ஒரு தெளிவான சிந்தனை தேவை 

🕯️ *இன்றைய தற்சோதனை*

🕯️ சுத்த வெளியோடு பஞ்சபூதங்கள் ஓடும் நவகோள்கள் ஓடும் நம்முடைய நட்பு நிலை ஆழமாகவும் நீண்ட நெடிய தெளிவோடும் அமையும் போதுதான் நம் உடல் செல்களிலும் கரு மையத்திலும் உயிர்துகள்களிலும் இருக்கக்கூடிய களங்கங்கள் எல்லாம் தூய்மை படுத்தப்படுகிறது எண்ணங்கள் ஒழுங்கு அமைக்கப்படுகின்றன இந்த உண்மைகளையெல்லாம் கொஞ்சம் பொறுப்போடும் அக்கறையோடும் நம்மை கவனிக்கும் போதுதான் புரியவரும் ஆதலினால் சுத்த வெளியோடும் இயற்கையின் நிலைகளோடும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.

🕯️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🕯️ நம்முடைய கருமைய தன்மைக்கு தக்கவாறு நாம் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் ஏற்றத்தாழ்வான விளைவுகள் உருவாகவே செய்யும் மனமார அவைகளை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் உங்களுடைய 30 சதவீத வெற்றி அடுத்த தலைமுறைக்கு வித்தாக அமைந்து அவர்கள் நீங்கள் வழங்கிய 30 சதவீத வெற்றியோடு தன்னுடைய ஆன்மீக வாழ்க்கை பயணத்தை மேலும் மேலும் வெற்றி பெற்று தன்னிலை விளக்கத்தோடு வாழ்வார்கள் வாழ்க வளமுடன்...

🕯️ *இன்றைய மூலிகை*

🕯️ எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும்‌. இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.

🕯️ பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.

🕯️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🕯️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🕯️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments