🍥🌐🍥🌐🍥🌐🍥🌐🍥🌐🍥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 14*
🍥🌐🍥🌐🍥🌐🍥🌐🍥🌐🍥
🔶 *இன்றைய நித்தியகடன்*
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 *இன்றைய சாதகம்*
🔶 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🔶 *இன்றைய நற்சிந்தனை*
🔶 பருத்திப் பஞ்சை சரியான முறையில் பயன்படுத்தினால் ஆடையாகும். மண், இரும்பு, சிமிண்ட் இவைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் மாளிகையாகும். இந்த பூமியில் இருக்கக்கூடிய அனைத்தையும் சரியான முறையில் பயன்படுத்தும் போது, அது மனிதர்களுடைய வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. நாம் இந்த பூமியில் மனிதனாக சரியான முறையில் தான் வாழ்கிறோமா..? என்று கேள்வி கேட்டுப் பார்த்தால் பதில் இல்லை.
🔶 *இன்றைய தற்சோதனை*
🔶 நாம் நம்மை எப்படி முறைப் படுத்திக் கொள்வது. இந்த வாக்கியத்தை உங்கள் செயல்கள் அனைத்திலும் பொருத்திப் பாருங்கள்.உங்களை நீங்கள் எந்த அளவுக்கு முறைபடுத்தி இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரிந்து விடும். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, எண்ணம், சொல், செயல் இம்மூன்றின் வழியாக துன்ப விளைவை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்கிறீர்களா? அப்படி வாழ்ந்தால் அதுவே முறைபடுத்தப்பட்ட வாழ்க்கையாகும்.
🔶 *இன்றைய பண்புப் பயிற்சி*
🔶 எல்லாவகையான பெருமைகளும் மனிதனுக்குள் உள்ளடங்கியிருக்கிறது. தான், தனது என்ற பொருள் பற்றையும், அதிகார பற்றையும் விட்டு விட்டால் உங்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் மேலோங்க துவங்கிவிடும். இந்த பொருள் பற்றையும், அதிகார பற்றையும் விட்டுவிடும் பண்பில் உயர்வோம், நாமாகவே நாம் வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🔶 *இன்றைய மூலிகை*
🔶 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🔶 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🔶 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🔶 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔶 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔶 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔶 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment