நித்தியகடன் டிசம்பர் 27 2021

🎱♨️🎱♨️🎱♨️🎱♨️🎱♨️🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 27*

🎱♨️🎱♨️🎱♨️🎱♨️🎱♨️🎱

🌌 *இன்றைய நித்தியகடன்*

🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌌 *இன்றைய சாதகம்*

🌌 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🌌 *இன்றைய நற்சிந்தனை*

🌌 ஏதோ ஒரு பகுதியிலிருந்து காற்று தன்னுடைய பயணத்தை இனிதே துவங்குகிறது. இந்த காற்றானது தான் பயணம் செய்யும் பகுதியில் உள்ள அனைத்து தன்மைகளையும் தனதாக்கிக் கொண்டு பயணிக்கும். இதுபோலவே நீர் மழையாக பொழிந்து மலைகள் மீதும், நிலத்தின் மீது விழுந்து ஆறாக ஓடும் போதும், இதுவும் தான் பயணிக்கும் பகுதியில் உள்ள அனைத்து தன்மைகளையும் தனதாக்கிக் கொண்டு, கடலில் சென்று சங்கமிக்கிறது.

🌌 *இன்றைய தற்சோதனை*

🌌 இந்த நிகழ்ச்சியானது காந்த பரிவர்த்தனை என்ற இறை நீதியின் அடிப்படையில் இயற்கையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாகும். இது போல நாமும் மனதால் என்ன வெல்லாம் நினைக்கின்றோமோ, அதனுடைய தன்மை எல்லாம் நம்முடைய தன்மையாக தன்மாற்றம் பெறும். இந்த இயற்கையின் இயக்க நீதியை நாம் கவனத்தில் கொண்டு எதை நினைக்க வேண்டும், எதனோடு நாம் இணைய வேண்டும் என்பதில் விழிப்பு நிலையோடு இருக்க வேண்டும்.

🌌 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌌 மன அலைச்சுழல் எப்போதும் விரைவாக சுழன்று ஓடிக் கொண்டே இருந்தால், இந்த உண்மைகளை நம்மால் உணர்ந்து கொள்ளவும் முடியாது ஏற்றுக் கொள்ளவும் முடியாது. மன அலைச் சுழலை படிப்படியாக குறைக்க வேண்டும். அதற்கான பயிற்சியில் தன்னை முழுமையாக இணைத்து நாம் நமக்குள் பயணித்து, நம்மை நாம் உணர முயற்சிக்க வேண்டும். இம்முயற்சியின் முடிவு தான் அறிவின் முழுமை பேறாக மலர்ந்து நிற்கும். இதற்கான முதலடியை எடுத்து வைப்போம் நம் அடுத்த சந்ததிக்கான வாழ்க்கை பாதையை உருவாக்கி வைப்போம். வாழ்க வளமுடன்... 

🌌 *இன்றைய மூலிகை*

🌌 *சின்ன வெங்காயம்+தேன்*
தேவையான பொருட்கள், சின்ன வெங்காயம் 10 கிராம் 
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்

🌌 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும். 

🌌 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- சின்ன வெங்காயம் சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.

🌌 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌌 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌌 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌌 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments