நித்தியகடன் டிசம்பர் 24 2021

♾️💢♾️💢♾️💢♾️💢♾️💢♾️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 24*

♾️💢♾️💢♾️💢♾️💢♾️💢♾️

🗨️ *இன்றைய நித்தியகடன்*

🗨️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🗨️ *இன்றைய சாதகம்*

🗨️ வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🗨️ *இன்றைய நற்சிந்தனை*

🗨️ கணினி வலைதளங்களில் உங்களுக்கான ரகசிய குறியீடு ஒன்றை மட்டும் பயன்படுத்தி பல தளங்களுக்கும் செல்ல முடியும். ஆனால் இந்த உள்ளுணர்வு ஆன்மீக பயணத்தில் உங்களுடைய ரகசிய குறியீடுகள் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். இதனை இறைவன் தான் செய்கின்றான். நீங்கள் உங்களுடைய ரகசிய குறியீடு என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். சென்று சேர்வதற்கான இலக்கையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தெளிந்த நீரோடை போல் இல்லாமல் இந்த பயணத்தில் வெற்றி என்பது கிட்டாது.

🗨️ *இன்றைய தற்சோதனை*

🗨️ ரகசிய குறியீடுகளும் தளங்களும் மாறிக் கொண்டேதான் இருக்கும், காரணம் என்னவென்றால்... உங்களுடைய கருவமைப்பு தன்மையையும் தரத்தையும் பொறுத்து, நீங்கள் தற்போது தொடர்பு கொள்ளும் பொருள், இடம், காலம், நோக்கம், திறமை இவைகளை கையாளும் விதங்களை கணக்கிட்டுக் கொண்டு இறை ஆற்றல் நடத்தும் நாடகம். அவன் நடத்தும் நாடகத்தில் இதுவும் ஒன்று. நாம் தெளிவாக இருந்தால் மட்டுமே நமக்கான ரகசிய குறியீட்டையும் நாடகத்தையும் தெரிந்துகொள்ள முடியும், நமக்கான இலக்கிற்கும் சென்று சேர முடியும்.

🗨️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🗨️ இயற்கையின் பல்வேறு ரகசியங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் தயாராகும்போது, நீங்கள் பல்வேறு முறைகளில் சோதனைக்கு உள்ளாக்கப் படுவீர்கள். அதை உணர்ந்து கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நீங்கள் தகுதியானவர் தானா என்பதை அவன் சோதிக்காமல், அந்த உண்மையை உங்களுக்கு தெரியப்படுத்தவோ உணர்த்தவோ மாட்டான். விடாமுயற்சியோடும், வைராக்கியத்தோடும், தெளிவான சிந்தனையோடும் இருந்து அவன் வைக்கும் பரிட்சைகளில் தேர்ச்சி பெறுவோம். வாழ்க வளமுடன்...

🗨️ *இன்றைய மூலிகை*

🗨️ *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🗨️ செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🗨️ *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🗨️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🗨️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🗨️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🗨️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments