நித்தியகடன் நவம்பர் 08 2021

🔳🎱🔳🎱🔳🎱🔳🎱🔳🎱🔳

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 08*

🔳🎱🔳🎱🔳🎱🔳🎱🔳🎱🔳

🍀 *இன்றைய நித்தியகடன்*

🍀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍀 *இன்றைய சாதகம்*

🍀 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🍀 *இன்றைய நற்சிந்தனை*

🍀 நாம் பிறப்பதற்கு எது காரணமாக அமைந்தோ அதுவே தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும், இனி நாம் வாழ்வில் நடைபெறப் போகின்ற அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் காரணமாக இருக்கப் போகிறது. இந்த மூல காரணி என்ன என்று தெரிந்து கொள்வோம். நம்முடைய வினைப்பதிவு தான் இந்த அனைத்துக்கும் மூல காரணமாகும். இந்த வினைபதிவை சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் என்று மூன்று வகையாக பிரித்து வகைப்படுத்தி பேசுவார்கள்.

🍀 *இன்றைய தற்சோதனை*

🍀 இன்றைய சூழ்நிலையில் இந்த கர்மவினை பதிவுகளை எண்ணி நாம் பயம் கொள்ள தேவையில்லை. இவைகளையெல்லாம் முறையான பயிற்சி மூலமாக சீர்திருத்தம் செய்து மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். அத்தகைய சிறப்புமிக்க பயிற்சி முறையாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய வேதாத்திரியம் இருக்கிறது. எந்தெந்த முறையில் நாம் நம் கர்மவினைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தற்சோதனை செய்து இன்றே, இப்போதே, இக்கணமே துணிந்திடு மனமே.

🍀 *இன்றைய பண்புப் பயிற்சி*

🍀 இந்த கர்மவினைகளை சுலபமாக மாற்றியமைத்துவிட முடியும். அதனை சிந்தித்து அந்த சிந்தனை வளத்தில் நாளுக்கு நாள் உயர்வு பெறுவோம். தினந்தோறும் பயிற்சியை செய்யும் பண்பில் உயர்வோம். சொல்லால் மட்டும் நம்பிவிடாமல் சுயமாய் சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...

🍀 *இன்றைய மூலிகை*

🍀 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🍀 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🍀 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🍀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments