நித்தியகடன் அக்டோபர் 23 2021

♦️🕸️♦️🕸️♦️🕸️♦️🕸️♦️🕸️♦️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 23*

♦️🕸️♦️🕸️♦️🕸️♦️🕸️♦️🕸️♦️

🌀 *இன்றைய நித்தியகடன்*

🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌀 *இன்றைய சாதகம்*

🌀 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🌀 *இன்றைய நற்சிந்தனை*

🌀 திட்டமிடல், அயராவிழிப்பு நிலை, தற்சோதனை இதுவே இறை நிலை வரை நம்மை கொண்டு சேர்க்கும். இறைநீதிக்கு முரண்படாமல் உங்களுடைய செயல்களை திட்டமிட்டு கொண்டு அயரா விழிப்பு நிலையோடு உங்களுடைய செயல்களை கூர்ந்து கவனியுங்கள். எந்த ஒரு செயலும் காலத்திற்கு, காலம் மாற்றத்துக்கு உரியதேயாகும். திட்டமிட்டபடி அனைத்தும் அப்படியே நடந்து முடியும் என்பதற்கு இல்லை. சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் மாறும் போது அவைகளில் சற்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படவே செய்யும்.

🌀 *இன்றைய தற்சோதனை*

🌀 அயரா விழிப்பு நிலையோடு கண்காணித்து கொண்டே இருங்கள். உங்களை நீங்கள் எப்போதும் தற்சோதனையில் வைத்துக் கொள்ளுங்கள், அப்போதுதான் உங்கள் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவைகள் வழியாக துன்ப விளைவுகள் ஏற்படாமல் வாழ்வதுவே அயராவிழிப்பு நிலையாகும், அதுவே இறைநீதியுமாகும். 

🌀 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌀 திட்டமிட்டு செயலாற்றி அதனை எப்போதும் தற்சோதனையிலேயே வைத்து பழகி, அயரா விழிப்பு நிலையோடு, வாழும் பண்பில் நாளுக்கு நாள் உயர்வோம். இந்த பண்பில் உயர உயர நம் உடலாலும், மனதாலும், உயிராலும் தூய்மை பெறுகிறோம். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று இணைகிறோம். வாழ்க வளமுடன்...

🌀 *இன்றைய மூலிகை*

🌀 *கருஞ்சீரகம்* தேவேயான பொருட்கள், கருஞ்சீரகம் – 50gm, 
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm

🌀 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

🌀 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

🌀 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது. 

🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments