🌌🌍🌌🌍🌌🌍🌌🌍🌌🌍🌌
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 16*
🌌🌍🌌🌍🌌🌍🌌🌍🌌🌍🌌
💐 *இன்றைய நித்தியகடன்*
💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💐 *இன்றைய சாதகம்*
💐 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
💐 *இன்றைய நற்சிந்தனை*
💐 இந்த அண்ட வெளியில் பூமி மிதந்து, உருண்டு, சுழன்று ஓடிக் கொண்டிருக்கிறது. பஞ்ச பூதங்களும் இந்த பூமியில் சரியான விகிதாச்சாரத்தில் ஒன்றை ஒன்று அரவணைத்து கொண்டு இயங்குகிறது. இந்த பூமியானது இதில் வாழும் அனைத்து உயிர்களுக்குமான, உணவை வழங்கியும் அனைத்து உயிர்களுக்கும் வசிப்பிடமாகவும் இருக்கிறது. இந்த பூமியின் மேற்பரப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
💐 *இன்றைய தற்சோதனை*
💐 இயற்கையின் அற்புதமான தன்மாற்றம் இந்த பூமி. இதில் இருக்கக்கூடிய வளங்களை முறைதவறி மனிதர்கள் பயன்படுத்தி, பெரும் பாதிப்புக்கு இந்த பூமியை உள்ளாக்கி கொண்டிருக்கிறோம். இவைகளை குறைத்துக் கொள்ளாமல் இதே நிலை நீடித்தால் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குள்ளாக, இந்த பூமியை நாம் இழந்துவிடுவோம். நம்முடைய ஒட்டுமொத்த தவறுதான் இன்று கட்டுப் படுத்த முடியாத உயிர் கொல்லியாக நம் முன் நின்று கொண்டிருக்கிறது, என்ற உண்மையை உணர்வோம்.
💐 *இன்றைய பண்புப்பயிற்சி*
💐 தேவைகள், பழக்கவழக்கங்கள், எதிர்பார்ப்புகள் இதையெல்லாம் எல்லா மனிதர்களும் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இயற்கையை மதித்து வாழக்கூடிய முறையான வாழ்க்கையை தானும் வாழ்ந்து, தன்னுடைய அடுத்த சந்ததியர்களுக்கும் அதில் வாழ பழக்கி, மனிதர்கள் மனிதர்களுக்கும் பூமிக்கும் தொண்டு செய்ய வேண்டும். நம்மை ஒழுங்கமைத்து கொள்வது நமக்கும் நல்லது, உலகுக்கும் நல்லது. மனவளக்கலை பயிற்சிகள் நம்மை ஒழுங்குபடுத்தும், பக்குவப்படுத்தும் பயிற்சியை செய்வோம் பயனுற வாழ்வோம். வாழ்க வளமுடன்...
💐 *இன்றைய மூலிகை*
💐 *கருஞ்சீரகம்* தேவேயான பொருட்கள், கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
💐 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
💐 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
💐 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
💐 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💐 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment