🔘🌀🔘🌀🔘🌀🔘🌀🔘🌀🔘
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 30*
🔘🌀🔘🌀🔘🌀🔘🌀🔘🌀🔘
🌐 *இன்றைய நித்தியகடன்*
🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌐 *இன்றைய சாதகம்*
🌐 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌐 *இன்றைய நற்சிந்தனை*
🌐 கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவரவர்களுடைய கருமையத்தின் தன்மைக்கு தக்கவாறு அவைகள் ஒவ்வொரு ஜீவனுக்கும் மாறுபட்ட விளைவுகளை தருகின்றன. கோள்களின் காந்த அலைகளுக்கு நன்மை-தீமை என்பதெல்லாம் கிடையாது. அவைகள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவன்களுக்கும் பொதுவானவை.
🌐 *இன்றைய தற்சோதனை*
🌐 நம் உடலிலுள்ள ஏழு தாதுக்களும் ஒவ்வொரு கோள்களோடு நேரடியாக தொடர்புடையவை. சந்திரனின் காந்த அலை கதிர்கள் நம் ரத்தத்தோடு தொடர்புடையது. ஆனால் இவை ரத்தத்தில் நேரடியாக கலந்து விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. மாறாக அக்காந்த அலை கதிர்கள் நம் கருமையத்திற்கு சென்று, நம் கருமைய தன்மைக்குத் தக்கவாறு தன் மாற்றம் பெற்று, அதன் பின்னரே உடலில் உள்ள ரத்தத்தோடு இணைகின்றது.
🌐 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌐 நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திர கூட்டம் என்று மகரிஷி அவர்கள் தெளிவாக இதனை விளக்கி இருக்கிறார்கள். கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் நமக்கு நன்மையே தான் செய்து கொண்டிருக்கிறது. நம் கருமைய தன்மைக்கு ஏற்றவாறு இவைகள் நமக்கு விளைவுகளாக அமைகின்றன. இதனை தெளிவாக உணர்ந்து கொண்டு நம் கருமையத்தை தூய்மை செய்து கொள்வோமாக... வாழ்க வளமுடன்...
🌐 *இன்றைய மூலிகை*
🌐 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🌐 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🌐 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🌐 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🌐 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌐 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment