நித்தியகடன் செப்டம்பர் 24 2021

♻️❄️♻️❄️♻️❄️♻️❄️♻️❄️♻️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 24*

♻️❄️♻️❄️♻️❄️♻️❄️♻️❄️♻️

🧠 *இன்றைய நித்தியகடன்*

🧠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🧠 *இன்றைய சாதகம்*

🧠 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🧠 *இன்றைய நற்சிந்தனை*

🧠 இந்த பூமியில் பருவ காலங்களை சரியாக அமைந்திருப்பதால் தாவரங்கள் வளர்வதற்கும் அதனை தொடர்ந்து உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு அமைகிறது, அதேபோல மனிதர்களுக்குள் பல வகையான திறமைகளும் நுட்பங்களும் சிறப்பு அமைப்புகளும் இருக்கின்றது. இவைகள் முறையான நற்பண்புகள் மூலம் அமைந்து அதன் விளைவாக அணு அடுக்குகள் சீரமைக்கப்பட்டு காந்தப் பினைப்புகளும் உருவாகி மூளை செல்கள் சிறப்பு நிலையை அடைகிறது.

🧠 *இன்றைய தற்சோதனை*

🧠 நம்முடைய வாழ்க்கையின் பல வகையான திறமைகளும் செயல்களும் அவரவர்களுடைய மூளை இயக்கத்தின் சிறப்பில் தான் அமைகிறது, மூளையுடைய சிறப்பு தன்மையே ஒவ்வொரு மனிதனையும் இந்த பிரபஞ்சத்திற்குள்ளாகவும் தனக்குள்ளாகவும் இருக்கக் கூடிய உண்மைகளை எல்லாம் உணரச் செய்கிறது. இதற்கான பயிற்சி முறைதான் குண்டலினி யோகமாக அமைந்து வேதாத்திரி மகரிஷி அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கிறது இதனை நன்றாக தற்சோதனை செய்து உள்ளுணர்வாய் உணர்வோமாக.

🧠 *இன்றைய பண்புப் பயிற்சி*

🧠 பொருள் துறை சார்ந்தவர்கள் அதிகாரத்தால் இந்த உலகில் வாழக்கூடிய மக்கள் வாழ்க்கையில் மயக்க உணர்ச்சிகளும் துன்பங்களும் இன்னல்களும் இடர்பாடுகளும் உருவாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது இவைகளில் இருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனையில் இணைத்து தனக்கான தேவைகளை முறைப்படுத்தி உயிருக்கு உகந்த செயல் பண்பில் நாம் அனைவரும் உயர்வோமாக. வாழ்க வளமுடன்...

🧠 *இன்றைய மூலிகை*

🧠 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🧠 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🧠 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🧠 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🧠 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🧠 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🧠 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments