🎭🎛️🎭🎛️🎭🎛️🎭🎛️🎭🎛️🎭
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 18*
🎭🎛️🎭🎛️🎭🎛️🎭🎛️🎭🎛️🎭
🚉 *இன்றைய நித்தியகடன்*
🚉 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚉 *இன்றைய சாதகம்*
🚉 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🚉 *இன்றைய நற்சிந்தனை*
🚉 நாம் ஒரு ரயில் வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்வோம். ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும்போது மரங்களும் செடிகளும் வேகவேகமாக பின்னோக்கி போவது போல தோன்றும். ரயிலின் இந்த வேகத்தால் அது என்ன மரம், என்ன பூ, அதன் நிறம் என்ன என்று எதுவுமே நமக்கு தெரியாது.அதனுடைய வேகம் குறையும்போது அது என்ன பூ, இலையின் வடிவம் என்ன, அது என்ன நிறத்தில் இருக்கிறது. அதில் என்ன காய் காய்க்கிறது என்று எல்லாமே தெளிவாக தெரியும்.
🚉 *இன்றைய தற்சோதனை*
🚉 ரயிலின் வேகம் குறைந்ததால் நம்மால் அனைத்தையும் உணரமுடிந்தது. இதுபோல மனதினுடைய வேகம் குறைந்தால் தான், வாழ்க்கையும் அவை சார்ந்த அனைத்தும் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எல்லா வகையிலும் தற்சோதனை செய்து இந்த உண்மையோடு இணைந்து வாழ்வை நிறைவாக வாழ்வோம்.
🚉 *இன்றைய பண்புப் பயிற்சி*
🚉 வேகம் குறைந்த மனம் தெய்வ நிலைக்கு உயர்கிறது. இறைநிலையின், இயற்கையின் எல்லாவகையான தன் மாற்றத்தையும் அமைதியான இந்த மனதின் மூலமாக மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். மனோ சக்தியும், மன அமைதியும் பெருகும் அதுவே ஞான பண்பாகவும் திகழ்கிறது. வாழ்க வளமுடன்...
🚉 *இன்றைய மூலிகை*
🚉 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🚉 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🚉 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🚉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🚉 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🚉 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🚉 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🚉 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment