♾️🍁♾️🍁♾️🍁♾️🍁♾️🍁♾️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 13*
♾️🍁♾️🍁♾️🍁♾️🍁♾️🍁♾️
💠 *இன்றைய நித்தியகடன்*
💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 *இன்றைய சாதகம்*
💠 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
💠 *இன்றைய நற்சிந்தனை*
💠 நம்முடைய நிலைப்பாடு (status) என்ன என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இது சரியாக புரிந்து கொள்ளாத போதுதான் பலவிதமான சிக்கல்களை வாழ்க்கையில் ஏற்படுத்தி விடுகிறோம். நம்முடைய நிலைப்பாடு (status) நாளுக்கு நாள் உயர்வு காண வேண்டும். இந்த நிலைபாட்டை (status) அடிப்படையாகக் கொண்டு தான் நம்முடைய எதிர்காலத்தை இறைநிலை தீர்மானிக்கிறது. நிலைப்பாடு (status) என்பது பணமோ, சமுதாயத்தில் மதிப்போ, மரியாதையோ அல்ல நம்முடைய மனசாட்சி நம்மை மதிப்பதே ஆகும்.
💠 *இன்றைய தற்சோதனை*
💠 நம்மை நாம் தெளிவாக உணர வேண்டுமானால்..? நான் என்ற பொருளோடு சரியாக இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொருளாக இருப்பது அறிவு. உயிர் மீது மனம் செலுத்தி மனதை பக்குவப்படுத்த, பக்குவப்படுத்த தான் நான் யார் என்று புரிதல் ஏற்படும். அது வரையில் அது ஒரு மாயையான நிலையாகவே இருக்கும். உயிரோடு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு உயிருக்கு உகந்த செயல், செய்து சிறப்பாக வாழ்வோம். உயிரைப் பற்றி எல்லா நிலைகளிலும் தற்சோதனை செய்து தெளிவு பெறுவோம்.
💠 *இன்றைய பண்புப் பயிற்சி*
💠 உயிருக்கு பொருத்தமான செயல் பண்பையே வாழ்க்கையாக வாழவேண்டும். உயிருக்கு எதிரான செயல்பாடுகளில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ளாமல் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு கவனம் செலுத்தாமல் இருந்து விட்டால் நாம் துன்பத்தையே அனுபவமாக பெற வேண்டி வரும். ஆதலினால் உயிருக்கு உகந்த செயல் பண்பில் உயர்வோம். இந்தப்பண்பே "அறிவே நாம்" என்ற தகுதியை நமக்குள் உயர்த்துகிறது. என்ற உண்மையை உணர்வோம். வாழ்க வளமுடன்...
💠 *இன்றைய மூலிகை*
💠 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
💠 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
💠 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
💠 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💠 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💠 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💠 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment