நித்தியகடன் ஜூலை 16 2021

 https://youtu.be/E3c818ehw5Q


வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியகடன்

ஜூலை 16


🎲🕳️🎲🕳️🎲🕳️🎲🕳️🎲🕳️🎲


🥑 இன்றைய நித்தியகடன்


🥑 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🥑 இன்றைய சாதகம்


🥑 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.

 

🥑 இன்றைய நற்சிந்தனை


🥑 ஒரு பழத்தை எடுத்து ஆய்வு செய்து பாருங்கள். அது எவ்வகையான பழமாக இருந்தாலும் அது  கடந்துவந்த அனுபவத்தை ஆராய்ச்சி செய்யுங்கள். இவ்வாறு பழத்துக்குள் விதையாக இருந்து மண்ணுக்குள் புதைந்து மரமாகி, பூவாகி, காயாகி, வந்திருக்கிறது . இது கடந்து வந்த பாதையை அனுபவத்தை சிந்தித்துப் பாருங்கள்.


🥑 இன்றைய தற்சோதனை


🥑 ஒரு பழத்திற்கு பின்னால் அது பழமாக உருவாவதற்கு எடுத்த முயற்சிகள் நிறைய இருக்கிறது‌. சாதாரணமானதாக இருந்து விட முடியாது. பல்வேறு விதமாகவும், எல்லா வழிமுறைகளிலும் முயற்சி நடந்திருக்கிறது. அது பல்வேறு பருவ காலங்களை கடந்து வந்திருக்கிறது. காற்றிலிருந்தும், வெப்பத்திலிருந்து, நீரிலிருந்தும், நிலத்திலிருந்தும் தான் உருவாவதற்கான சத்துக்களை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு தன்னை உருவகப்படுத்தி முழுமுயற்சியோடு வெற்றி பெற்றது. ஒரு விதைக்குள் அடங்கி இருந்த பழமாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டது. 


🥑 இன்றைய பண்புப் பயிற்சி


🥑 வெளியில் இருந்து பார்ப்பதற்கு எந்த ஒன்றும் சுலபமாகத் தான் தெரியும். அதனோடு ஒன்றி கலந்து பயணித்து பாருங்கள். அவை எடுத்த முயற்சிகள், அவை சந்தித்த போராட்டங்கள் அனைத்துமே அதன் அதன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திருக்கும். முயற்சியும், போராட்டமும் இல்லாமல் எதுவும் கிடையாது. நமக்கான ஞானத்தில் நாம் வாழ்வதற்கு விடாமுயற்சி எனும் பண்பில் சிறந்து விளங்க வேண்டும் அப்போதுதான் ஞானவிதை முளைக்கத் துவங்கும். வாழ்க வளமுடன்...


🥑 இன்றைய மூலிகை


🥑 நிலவேம்பு குடிநீர் தேவையான பொருள் தண்ணீர் -200ml

நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.


🥑 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.


🥑 முக்கிய குறிப்பு:- காலையில் தயாரித்து. காலை வெறும்

வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml

நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.

(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)


🥑 ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.


🥑 குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🥑 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🥑 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments