நித்தியகடன் ஜூலை 09 2021

 https://youtu.be/thkm0zA8P-8


வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியகடன்

ஜூலை 09


🌏🕊️🌏🕊️🌏🕊️🌏🕊️🌏🕊️🌏


🐚 இன்றைய நித்தியகடன்


🐚 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🐚 இன்றைய சாதகம்


🐚 வெள்ளிக் கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.

 

🐚 இன்றைய நற்சிந்தனை


🐚 மனிதனுக்குள் இருக்கும் உயிர் துகள்களானது, பலவிதமான ரகசியங்களையும், நடந்து அனைத்து வரலாற்று உண்மைகளையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது. நடந்து அனைத்து வரலாற்று உண்மைகளுக்கும் உயிர்துகள்கள் ஒரு சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. எவர் வேண்டுமானாலும் முயற்சி செய்து உயிருக்குள் புதைந்திருக்கும், பிரபஞ்ச தன்மாற்றம் ரகசியங்களை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். இதற்கு ஒரே ஒரு வழி மட்டும் தான் இருக்கிறது. உயிருக்குள் ஒடுங்கி உயிரை கடந்து நின்று வாழ்ந்து பழக வேண்டும்.


🐚 இன்றைய தற்சோதனை


🐚 மனித உடலுக்குள் இந்த உயிர் துகள்களானது சிறப்பான பண்புகளை, உள்ளடக்கிக் கொண்டு பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது. உடலை இயக்குவது உயிரின் முதல் வேலையாகும். அந்த இயக்கத்திற்கு ஏதேனும் தடை ஏற்பட்டால் அந்த தடைகளை சரி செய்வது உயிரின் இரண்டாவது வேலையாகும். இந்த மனித உடலை பயன்படுத்தி உயிர் தன்னுடைய மூலத்தை சென்று சேர்வதற்கான வேலைகளையும் செய்கிறது. இந்த மூன்றாவது வேலையை குண்டலினி யோகிகளால் மட்டுமே உயிருக்கு அமைத்துக் கொடுக்க முடியும்.


🐚 இன்றைய பண்புப்பயிற்சி


🐚 உடலை இயக்குவதிலும், தடைகளை நீக்குவதிலும், உயிராற்றலை இதற்கே செலவிட்டு விடுகிறது. தியானப் பயிற்சியில் ஈடுபடும் ஒருவர் தன் தேவைகளை முறைப் படுத்திக் கொண்டு எண்ணம், சொல், செயல்களால் பிழைகள் செய்யாமலும், இருக்கும் பிழைகளை நீக்கிக் கொண்டும் வாழும் போது தன்னுடைய, மூலத்தை நோக்கிய பயணத்தில் உயிர் துகள்களுக்கு முனைப்பு ஏற்படுகிறது. உயிருக்கு ஒத்த முறையில் நம் பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக்கொண்டு, உயிருக்கான வாழ்க்கையை வாழத் துவங்குவோம். வாழ்க வளமுடன்...


🐚 இன்றைய மூலிகை


🐚 நிலவேம்பு குடிநீர் தேவையான பொருள் தண்ணீர் -200ml

நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.


🐚 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.


🐚 முக்கிய குறிப்பு:- காலையில் தயாரித்து. காலை வெறும்

வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml

நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.

(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)


🐚 ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.


🐚 குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🐚 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🐚 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments