நித்தியகடன் மே 15 2021

🎛️🎼🎛️🎼🎛️🎼🎛️🎼🎛️🎼🎛️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 15*

🎛️🎼🎛️🎼🎛️🎼🎛️🎼🎛️🎼🎛️

🎲 *இன்றைய நித்தியகடன்*

🎲 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎲 *இன்றைய சாதகம்*

🎲 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🎲 *இன்றைய நற்சிந்தனை*

🎲 இந்த பூமியில் வெட்ப தட்ப நிலைமைக்கு ஏற்ப, அப்பகுதியில் வாழக்கூடிய உயிரினங்களில் அறிவாற்றல், திறமை, உடலமைப்பு, அதன் உள்ளமைந்த தன்மை இவை அனைத்தும் வேறுபடுகிறது. இந்த இயற்கையினுடைய சட்டத்தை சிந்தித்து இதனுடைய ரகசியத்தை உணர்ந்து கொள்வோம். இந்த ரகசியம் தான் நம் மனதை விரிவடையச் செய்யும். சிந்தனை செய்யுங்கள்...

🎲 *இன்றைய தற்சோதனை*

🎲 எவ்வாறெல்லாம் இந்த பூமி இந்த உயிர்களுக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு, இதற்கு அடிப்படையாக அமைந்த கோட்பாட்டினை தற்சோதனை செய்து உணர்வோமாக.

🎲 *இன்றைய பண்புப் பயிற்சி*

🎲 எந்த ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் என்றாலும், அதற்கு தகுந்த மனப்பயிற்சி, மனப்பக்குவம் தேவை. நாம் பண்படைய பண்படையத்தான் இந்த மனப்பக்குவம் அமைகிறது. நாம் பண்படாத போது நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் நம்மைச் சுற்றி இருந்து கொண்டே இருக்கும். ஆகவே வாழ்நாள் முழுவதும் மனதை பண்படுத்தி இயற்கையை அதனுடைய இயக்கத்தை உணர்வோம். வாழ்க வளமுடன்...

🎲 *இன்றைய மூலிகை*

🎲 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm, 
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm

🎲 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

🎲 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

🎲 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, 
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது. 

🎲 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎲 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎲 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments