நித்தியகடன் மே 07 2021

☄️🎑☄️🎑☄️🎑☄️🎑☄️🎑☄️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 07*

☄️🎑☄️🎑☄️🎑☄️🎑☄️🎑☄️

🕸️ *இன்றைய நித்தியகடன்*

🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🕸️ *இன்றைய சாதகம்*

🕸️ வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🕸️ *இன்றைய நற்சிந்தனை*

🕸️ மனம் பலவிதமான முகமூடிகளை தன்னிடம் இருப்பாக வைத்திருக்கிறது. தேவைப்படும் போது குடும்பத்தில், சமுதாயத்தில், உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் என அணைவரிடமும் அவைகளை அனிந்து கொண்டு, பாவனைகளை வெளிப்படுத்தி நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. மற்றவர்களை ஏமாற்ற, தன்னை‌ மற்றவர்கள் ஏமாற்றியதை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு, தான் செய்வது சரிதான் என்று தன்னை தட்டிக் கொடுத்துக் கொண்டும், சமாதனப் படுத்திக் கொண்டும் நாடக வாழ்க்கையை இடைவெளியின்றி நடந்து கொண்டிருக்கிறது...

🕸️ *இன்றைய தற்சோதனை*

🕸️ நாம் ஏமாறுவதால் மற்றவர்களை ஏமாற்றுகிறோம். நாம் ஏமாறாவிட்டால் மற்றவர்களையும் ஏமாற்றப் போவது இல்லை. நாம் ஏமாந்ததற்கு என்ன காரணம்? அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு. தேவைகளை முறைபடுத்தத் தெரியாத அறிவின் குறைபாடு. இதனை புரிந்து கொள்ள முடியாமல், புலன் போதையில் மிதந்து கொண்டு, யாருக்கும் நன்மையில்லாத நம்பகத் தன்மையுமில்லாத, போலி வாழ்க்கையை வாழ்கிறோம்.

🕸️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🕸️ பழி தீர்த்தல், பாவம் செய்தல், தற்காலிகமாக முடிவு எடுத்தல் அனுமான அடிப்படையில் நம்முடைய அடுத்த சந்ததிகளுக்கு பிழை திருத்தமில்லாமல், நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்படியே வாழ்க்கையாக கற்றுக் கொடுக்கிறோம். நேரடியாகவும் மறைமுகமாகவும் அடுத்த சந்ததியை ஊனமாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த கற்றலிலிருந்தும் கற்பித்தலிலிருந்தும், நம்மை தற்காத்துக் கொள்ளும் பண்பில் உயர்வோம். மாயமுகமூடிகளை கழட்டி எரிவோம். நாமகவே நாம் வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🕸️ *இன்றைய மூலிகை*

🕸️ *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🕸️ செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🕸️ *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🕸️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🕸️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🕸️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments