நித்தியகடன் ஏப்ரல் 23 2021

🎱♨️🎱♨️🎱♨️🎱♨️🎱♨️🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஏப்ரல் 23*

🎱♨️🎱♨️🎱♨️🎱♨️🎱♨️🎱

🕸️ *இன்றைய நித்தியகடன்*

🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🕸️ *இன்றைய சாதகம்*

🕸️ வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🕸️ *இன்றைய நற்சிந்தனை*

🕸️ அவர் அவர்களுடைய அனுபவத்தையும், புரிதலையும் தாண்டி யாராலும் செயல்பட முடியாது. உங்களுடைய அனுபவத்தை மட்டும் தான் உங்களால் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியும். அனுபவம் இல்லாதவற்றை அனுமானமாக பேசலாம் சிந்திக்கலாம், ஆனால் அந்த அனுபவம் முழுமையான உண்மையாக இருக்குமா என்றால் சற்று சந்தேகம்தான். 

🕸️ *இன்றைய தற்சோதனை*

🕸️ அனுபவம்தான் நல்ல ஆசான் ஆகும் அனுபவத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ளுங்கள். அனுபவத்தை மையமாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கையை சீராக, சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே அனுபவத்தை வளர்த்துக் கொள்ளவதில் இருந்து பின்வாங்காதீர்கள். அனுபவமே அனைத்து இயக்க அருள் பேராற்றல் ஆகும். அனுபவம் என்பது தற்சோதனை என்ற பலமான பயிற்சிக்கு பின்னால் அமையக் கூடியது. 

🕸️ *இன்றைய பண்புப் பயிற்சி*

🕸️ மனதை பண்படுத்தி எப்போதும் இறைவனை உணரக்கூடிய தன்மையிலேயே பழக்கங்கள். மனம் எப்போதும் ஆராய்ச்சியிலேயே இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். ஆராய்ச்சி, தெளிவு, முடிவு இவைகளில் மனதை எப்போதும் இயக்கிப் பழக்குங்கள். இது தான் மனிதனுடைய சிறப்பினை மனிதனுக்குள் உய்விக்கும் அற்புதமான பெட்டகமாகும். வாழ்க வளமுடன்...

🕸️ *இன்றைய மூலிகை*

🕸️ *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🕸️ செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🕸️ *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🕸️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🕸️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🕸️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments