நித்தியகடன் மார்ச் 26 2021

🍒🍥🍒🍥🍒🍥🍒🍥🍒🍥🍒

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 26*

🍒🍥🍒🍥🍒🍥🍒🍥🍒🍥🍒

🍀 *இன்றைய நித்தியகடன்*

🍀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍀 *இன்றைய சாதகம்*

🍀 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.

🍀 *இன்றைய நற்சிந்தனை*

🍀 கடலின் ஓரத்தில் அலைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அலை ஓயட்டும் அதன்பின் கடலுக்குள் இறங்கலாம் என்று நினைத்தால், அலை எப்பொழுது ஓய்வது நாம் எப்போது கடலுக்குள் செல்வது. அலை ஓயப்போவதுமில்லை, நாம் கடலுக்குள் செல்ல போவதும் இல்லை. அந்தந்த வயதில் அந்தந்த பணிகளை செவ்வனே செய்து சிறப்புபெறவேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே உடலைப் பற்றியும், மனதைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் தெரிந்து கொள்ளக் கூடிய தேடல், வாழ்க்கையை முழுமைபடுத்தும்.

🍀 *இன்றைய தற்சோதனை*

🍀 சிந்தையை ஒருமுகப்படுத்திக் கொண்டு வைராக்கியத்தோடு, உயிரைப் பற்றிய தேடலில் வெற்றி பெறவேண்டும். தங்களுடைய உயிரை பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் போனால் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாது. ஏனெனில் உயிரே அனைத்துக்கும் மூலமாகவும், உயிரியக்கமே அனைத்தியக்கமாகவும் இருக்கிறது. எல்லா வகையிலும் தற்சோதனை செய்து உண்மையை உணர்வோம்.

🍀 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍀 உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த பண்பில் உயர்வு தரும் போது தான் நம்மிடம் இருக்கக்கூடிய, கற்பனையான எண்ணங்கள், தேவையில்லாத தேவையற்ற செயல்பாடுகள் அனைத்தையும் ஒழுங்கு செய்ய முடியும்.உள்ளதை உள்ளவாறு உணர்வோம் வாழ்வை வளமாக வாழ்வோம். வாழ்க வளமுடன்....

🍀 *இன்றைய மூலிகை*

🍀 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🍀 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🍀 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🍀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments